• May 16 2024

யாழ்ப்பாணத்தில் ஐக்கிய மக்கள் கட்சி எனும் புதிய கட்சி அங்குரார்ப்பணம்...!

Sharmi / Apr 29th 2024, 3:00 pm
image

Advertisement

யாழ்ப்பாணத்தில் ஐக்கிய மக்கள் கட்சி எனும் புதிய கட்சியொன்று இன்று முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உபதலைவர் அப்பையா இராஜவேந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம்(29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் புலேந்திரன் உதயகுமார் என்பவரை தலைவராக கொண்டு கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நாம் வெகுஜன அமைப்பாக செயற்பட்டு வருகின்றோம் .

கல்வி ,வாழ்வாதாரம், போரால் பாதிக்கப்பட்டோர் என பலதரப்பட்ட சேவைகளை நாம் செயற்படுத்தி வருகின்றோம். 

அதனடிப்படையில் இன்று முதல் எமது சேவைகளை ஐக்கிய மக்கள் கட்சி என்ற பெயரில் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளோம்.

எமது மக்களுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் இலங்கையின் அரசியல் அபைப்பிற்குட்பட்டு செயற்படுத்த இருக்கின்றோம். 

தற்பொழுது எமக்கு தேர்தல் நோக்கமில்லை. இருந்தாலும் இது குறித்து தேர்தல் காலத்திலேயே இறுதி முடிவினை எடுப்போம். 

இன, மத, மொழி வேறுபாடின்றி பலதரபட்ட மக்களிற்காகவும் இணைந்து செயற்படவுள்ளோம்.

தமிழ் இனம் சார்ந்த பிரச்சினைகளுக்காக பல கட்சிகளும் குரல் கொடுத்து கெண்டிருக்கின்ற நிலையில் அந்த கட்சிகளின் கண்ணுக்கு புலப்படாத பொதுமக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சேவையாற்றுவது எமது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் ஐக்கிய மக்கள் கட்சி எனும் புதிய கட்சி அங்குரார்ப்பணம். யாழ்ப்பாணத்தில் ஐக்கிய மக்கள் கட்சி எனும் புதிய கட்சியொன்று இன்று முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உபதலைவர் அப்பையா இராஜவேந்தன் தெரிவித்தார்.இது தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம்(29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் புலேந்திரன் உதயகுமார் என்பவரை தலைவராக கொண்டு கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நாம் வெகுஜன அமைப்பாக செயற்பட்டு வருகின்றோம் .கல்வி ,வாழ்வாதாரம், போரால் பாதிக்கப்பட்டோர் என பலதரப்பட்ட சேவைகளை நாம் செயற்படுத்தி வருகின்றோம். அதனடிப்படையில் இன்று முதல் எமது சேவைகளை ஐக்கிய மக்கள் கட்சி என்ற பெயரில் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளோம்.எமது மக்களுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் இலங்கையின் அரசியல் அபைப்பிற்குட்பட்டு செயற்படுத்த இருக்கின்றோம். தற்பொழுது எமக்கு தேர்தல் நோக்கமில்லை. இருந்தாலும் இது குறித்து தேர்தல் காலத்திலேயே இறுதி முடிவினை எடுப்போம். இன, மத, மொழி வேறுபாடின்றி பலதரபட்ட மக்களிற்காகவும் இணைந்து செயற்படவுள்ளோம்.தமிழ் இனம் சார்ந்த பிரச்சினைகளுக்காக பல கட்சிகளும் குரல் கொடுத்து கெண்டிருக்கின்ற நிலையில் அந்த கட்சிகளின் கண்ணுக்கு புலப்படாத பொதுமக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சேவையாற்றுவது எமது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement