• Sep 08 2024

பொதுஜன பெரமுனவின் கோரிக்கைக்கு பதிலளிக்காத ஜனாதிபதி..! கவலையில் பசில்?

Chithra / May 15th 2024, 1:27 pm
image

Advertisement


ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துமாறு விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதியிடமிருந்து இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ நேற்று முன்தினம் ஜனாதிபதியை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் பசில் ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு இடையில் இடம்பெற்றுள்ள ஏழாவது கலந்துரையாடல் எனவும் கட்சியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி, நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில்,

 நாட்டின் அபிவிருத்தி தொடர்பான கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மேலும் தெரிவித்துள்ளது. 

பொதுஜன பெரமுனவின் கோரிக்கைக்கு பதிலளிக்காத ஜனாதிபதி. கவலையில் பசில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துமாறு விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதியிடமிருந்து இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ நேற்று முன்தினம் ஜனாதிபதியை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் பசில் ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு இடையில் இடம்பெற்றுள்ள ஏழாவது கலந்துரையாடல் எனவும் கட்சியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.அதன்படி, நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில், நாட்டின் அபிவிருத்தி தொடர்பான கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மேலும் தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement