• Aug 19 2025

சமிஞ்ஞை கம்பத்தின் மேல் ஏறியிருந்த நபர்; ஜனாதிபதி செயலகத்திற்கு முன் விசித்திர ஆர்ப்பாட்டம்!

shanuja / Aug 18th 2025, 12:55 pm
image

போக்குவரத்து சமிஞ்ஞை கம்பத்தில் நபரொருவர் ஏறியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கொழும்பு - ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரே உள்ள போக்குவரத்து சமிக்ஞை கம்பத்தின் 

மேல் நபரொருவர் இன்று ஏறியுள்ளார். 


போக்குவரத்து சமிஞ்ஞை மேல்  ஏறிய நபர் விசித்திரமான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 


ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதால் ஜனாதிபதியை சந்திப்பதற்கான ஓர் ஆர்ப்பாட்டமாக இருக்கலாம் என்று பேசப்பட்டு வருகின்றது. 


எனினும் குறித்த நபர் சமிஞ்ஞை கம்பத்தில் ஏறியதற்கான காரணம் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. 


திடீரென நபரொருவர் சமிஞ்ஞை கம்பத்தின் மேல் ஏறியிருந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 


போக்குவரத்து சமிஞ்ஞைக் கம்பத்தில் ஏறியிருந்ததால் போக்குவரத்தில் மக்களுக்க சிரமமும் ஏற்பட்டுள்ளது.


கம்பத்தில் ஏறிய நபரை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதேவேளை பொரளையில் கடந்த வாரம் நபரொருவர் மின்விளக்குக் கம்பத்தில் ஏறியிருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரை பொலிஸார் மின்தூக்கியால் மீட்டிருந்தனர். 


இந்த நிலையில் இன்று திடீரென சமிஞ்ஞை கம்பத்தில் நபரொருவர் ஏறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமிஞ்ஞை கம்பத்தின் மேல் ஏறியிருந்த நபர்; ஜனாதிபதி செயலகத்திற்கு முன் விசித்திர ஆர்ப்பாட்டம் போக்குவரத்து சமிஞ்ஞை கம்பத்தில் நபரொருவர் ஏறியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு - ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரே உள்ள போக்குவரத்து சமிக்ஞை கம்பத்தின் மேல் நபரொருவர் இன்று ஏறியுள்ளார். போக்குவரத்து சமிஞ்ஞை மேல்  ஏறிய நபர் விசித்திரமான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதால் ஜனாதிபதியை சந்திப்பதற்கான ஓர் ஆர்ப்பாட்டமாக இருக்கலாம் என்று பேசப்பட்டு வருகின்றது. எனினும் குறித்த நபர் சமிஞ்ஞை கம்பத்தில் ஏறியதற்கான காரணம் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. திடீரென நபரொருவர் சமிஞ்ஞை கம்பத்தின் மேல் ஏறியிருந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. போக்குவரத்து சமிஞ்ஞைக் கம்பத்தில் ஏறியிருந்ததால் போக்குவரத்தில் மக்களுக்க சிரமமும் ஏற்பட்டுள்ளது.கம்பத்தில் ஏறிய நபரை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பொரளையில் கடந்த வாரம் நபரொருவர் மின்விளக்குக் கம்பத்தில் ஏறியிருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரை பொலிஸார் மின்தூக்கியால் மீட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று திடீரென சமிஞ்ஞை கம்பத்தில் நபரொருவர் ஏறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement