• Aug 13 2025

எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் நாளை விசேட கலந்துரையாடல்!

Chithra / Aug 13th 2025, 1:37 pm
image

முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் கூட்டணியில் நாளையதினம் (14) விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, கடந்த வாரம், முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸின் இல்லத்தில் இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாகவே நாளையும் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்தக் கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும்,

அரசாங்கத்துக்கு நேரடியாக சவால் விடும் நோக்கத்துடன் கூட்டணியை உருவாக்க இந்த கலந்துரையாடல் பயன்படுத்தப்படாது என்றும் எதிர்க்கட்சி அரசியல் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் நாளை விசேட கலந்துரையாடல் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் கூட்டணியில் நாளையதினம் (14) விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதேவேளை, கடந்த வாரம், முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸின் இல்லத்தில் இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாகவே நாளையும் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்தக் கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும்,அரசாங்கத்துக்கு நேரடியாக சவால் விடும் நோக்கத்துடன் கூட்டணியை உருவாக்க இந்த கலந்துரையாடல் பயன்படுத்தப்படாது என்றும் எதிர்க்கட்சி அரசியல் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement