• Sep 20 2024

புத்தளத்தில் முக்கிய பொருளுடன் ஒருவர் கைது!

Sharmi / Feb 3rd 2023, 2:45 pm
image

Advertisement

புத்தளம் சமகிமாவத்த பகுதியில் நேற்று இரவு மேற்மொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கேரளா கஞ்சாப் பொதிகளுடன் ஒருவர் பொலிஸ் போதை தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய வீடொன்றை முற்றுகையிட்டு சோதனைகளை மேற்கொண்டபோதே குறித்த கஞ்சாப் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவித்தனர்.

இதன்போது கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா 3 கிலோகிராம் 800 கிராம் எடையுடையது எனவும் இதன் பெறுமதி சுமார் 7 இலட்சம் ரூபா என மதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புத்தளம் சமகிமாவத்தைப் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஆணொருவரென புத்தளம் பொலிஸ் போதைத் தடுப்புப் பிரிவினர். தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சாப்பொதிகள் புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பொலிஸ் போதைத் தடுப்புப் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளைப் புத்தளம் பொலிஸ் போதைத் தடுப்பிரிவினர் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

புத்தளத்தில் முக்கிய பொருளுடன் ஒருவர் கைது புத்தளம் சமகிமாவத்த பகுதியில் நேற்று இரவு மேற்மொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கேரளா கஞ்சாப் பொதிகளுடன் ஒருவர் பொலிஸ் போதை தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் போதைத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய வீடொன்றை முற்றுகையிட்டு சோதனைகளை மேற்கொண்டபோதே குறித்த கஞ்சாப் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவித்தனர்.இதன்போது கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா 3 கிலோகிராம் 800 கிராம் எடையுடையது எனவும் இதன் பெறுமதி சுமார் 7 இலட்சம் ரூபா என மதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புத்தளம் சமகிமாவத்தைப் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஆணொருவரென புத்தளம் பொலிஸ் போதைத் தடுப்புப் பிரிவினர். தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சாப்பொதிகள் புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பொலிஸ் போதைத் தடுப்புப் தெரிவித்தனர்.மேலதிக விசாரணைகளைப் புத்தளம் பொலிஸ் போதைத் தடுப்பிரிவினர் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement