• Sep 20 2024

விண்வெளியில் பிறந்தநாள் கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்!

Tamil nila / Sep 20th 2024, 8:42 pm
image

Advertisement

விண்வெளிக்குச் சென்றுவிட்டு எட்டு நாட்களில் பூமிக்குத் திரும்பிவிடலாம் என்னும் திட்டத்துடன் விண்வெளிக்குச் சென்ற இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பூமிக்குத் திரும்பமுடியாது என தகவல் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் மாதம் 19ஆம் திகதி சுனிதாவுக்கு பிறந்தநாள். பூமிக்குத் திரும்பமுடியாததால், விண்வெளியிலேயே தனது 59ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் சுனிதா.

சுனிதா பூமியில் இல்லாவிட்டாலும், பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்கள்.

வீடியோ ஒன்றில் தங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை பாடலாக பாடி வெளியிட்டுள்ள பாலிவுட் பிரபலங்கள், பொதுமக்களும் சுனிதாவுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுமாறு அந்த வீடியோவில் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

விண்வெளியில் பிறந்தநாள் கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்குச் சென்றுவிட்டு எட்டு நாட்களில் பூமிக்குத் திரும்பிவிடலாம் என்னும் திட்டத்துடன் விண்வெளிக்குச் சென்ற இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பூமிக்குத் திரும்பமுடியாது என தகவல் வெளியாகியுள்ளது.செப்டம்பர் மாதம் 19ஆம் திகதி சுனிதாவுக்கு பிறந்தநாள். பூமிக்குத் திரும்பமுடியாததால், விண்வெளியிலேயே தனது 59ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் சுனிதா.சுனிதா பூமியில் இல்லாவிட்டாலும், பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்கள்.வீடியோ ஒன்றில் தங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை பாடலாக பாடி வெளியிட்டுள்ள பாலிவுட் பிரபலங்கள், பொதுமக்களும் சுனிதாவுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுமாறு அந்த வீடியோவில் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

Advertisement

Advertisement

Advertisement