ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபரைக் கைது செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேக நபரால் தாக்கப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நன்னேரிய பொலிஸார் தெரிவித்தனர்.
நன்னேரிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நன்னேரிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள், சுற்றிவளைப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர் .
அப்போது மோட்டார் சைக்கிளில் 2 கிராம் 40 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பயணித்த ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
மஹா நன்னேரிய, கலயா பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரால் பொலிஸ் கான்ஸ்டபிள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபரைக் கைது செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேக நபரால் தாக்கப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நன்னேரிய பொலிஸார் தெரிவித்தனர்.நன்னேரிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.நன்னேரிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள், சுற்றிவளைப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர் . அப்போது மோட்டார் சைக்கிளில் 2 கிராம் 40 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பயணித்த ஒருவரைக் கைது செய்துள்ளனர். மஹா நன்னேரிய, கலயா பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.