• Jun 22 2024

மக்களின் பிரச்சனைகளை உங்களால் தான் தீர்த்து வைக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது: ஜனாதிபதி முன்னிலையில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி தெரிவிப்பு...!

Anaath / May 26th 2024, 6:01 pm
image

Advertisement

முல்லைத்தீவு மாவட்ட மக்களின் பிரச்சனைகளை உங்களால் தான் தீர்த்து வைக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் வன்னி மாவட்ட நடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு, புதுக்குடியிப்பு மகாவித்தியாலயத்தில் இன்று (26) இடம்பெற்ற உறுமய காணி உரித்து வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஜனாதிபதி வருகை தந்தையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இம்மாவட்டத்தில் பல பிரச்சனைகள் உள்ளன. அவற்றை உங்களால் தான் தீர்த்து வைக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது.

இந்த மாவட்ட அபிவிருத்திக் குழுவை உங்கள் தலைமையில் நடத்தி முல்லைத்தீவு மாவட்ட மக்களின் காணி உள்ளிட்ட பிரச்சனைகக்கு தீர்வு வழங்க வேண்டும். காணி உறுதியில்லாத மேலும் பலர் உள்ளனர். சொந்த இடங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எமது மக்களின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்கின்றேன் எனத் தெரிவித்தார். 

மக்களின் பிரச்சனைகளை உங்களால் தான் தீர்த்து வைக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது: ஜனாதிபதி முன்னிலையில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி தெரிவிப்பு. முல்லைத்தீவு மாவட்ட மக்களின் பிரச்சனைகளை உங்களால் தான் தீர்த்து வைக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் வன்னி மாவட்ட நடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு, புதுக்குடியிப்பு மகாவித்தியாலயத்தில் இன்று (26) இடம்பெற்ற உறுமய காணி உரித்து வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஜனாதிபதி வருகை தந்தையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இம்மாவட்டத்தில் பல பிரச்சனைகள் உள்ளன. அவற்றை உங்களால் தான் தீர்த்து வைக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது.இந்த மாவட்ட அபிவிருத்திக் குழுவை உங்கள் தலைமையில் நடத்தி முல்லைத்தீவு மாவட்ட மக்களின் காணி உள்ளிட்ட பிரச்சனைகக்கு தீர்வு வழங்க வேண்டும். காணி உறுதியில்லாத மேலும் பலர் உள்ளனர். சொந்த இடங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எமது மக்களின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்கின்றேன் எனத் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement