• Jun 17 2024

புத்தளம் - கொழும்பு ரயில் சேவைகள் இடைநிறுத்தம்...!

Anaath / May 26th 2024, 6:18 pm
image

Advertisement

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் தொடக்கம் கொழும்பு ரயில் சேவைகள் இன்று (26) இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலாவி தொடக்கம் முந்தல் வரையிலான ரயில் பாதையில் வெள்ளநீர் நிரம்பி காணப்படுவதால் இவ்வாறு ரயில் சேவைகள் இன்றைய தினம் நிறுத்தப்பட்டுள்ளதாக புத்தளம் ரயில் நிலையத்தின் கடமைநேர அதிகாரியொருவர் தெரிவித்தார்.

ரயில்வே திணைக்கள ஊழியர்கள் ரயில் பாதையை சுத்தப்படுத்தி,  தண்டவாளத்தில் காணப்பட்ட வெள்ளநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கொழும்பு கோட்டை ரயில் நிலத்தில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த ரயில் பங்கதெனிய வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


புத்தளம் - கொழும்பு ரயில் சேவைகள் இடைநிறுத்தம். நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் தொடக்கம் கொழும்பு ரயில் சேவைகள் இன்று (26) இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பாலாவி தொடக்கம் முந்தல் வரையிலான ரயில் பாதையில் வெள்ளநீர் நிரம்பி காணப்படுவதால் இவ்வாறு ரயில் சேவைகள் இன்றைய தினம் நிறுத்தப்பட்டுள்ளதாக புத்தளம் ரயில் நிலையத்தின் கடமைநேர அதிகாரியொருவர் தெரிவித்தார்.ரயில்வே திணைக்கள ஊழியர்கள் ரயில் பாதையை சுத்தப்படுத்தி,  தண்டவாளத்தில் காணப்பட்ட வெள்ளநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, கொழும்பு கோட்டை ரயில் நிலத்தில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த ரயில் பங்கதெனிய வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement