• Dec 03 2024

இலங்கையில் ஐஎஸ் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புபட்டவர்களை கண்டறிய விசேட நடவடிக்கை

Tharun / May 26th 2024, 6:25 pm
image

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் இலங்கையில் இருக்கிறார்களா என்பதை கண்டறிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் தற்போது அவசர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கடுவெல பிரதேசத்தில் இன்று (26) இடம்பெற்ற வெசாக் நிகழ்வில் கலந்து கொண்ட அவர் இதனை அறிவித்தார்.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி இந்த நாட்டிலிருந்து அகமதாபாத் நகருக்கு சென்ற  இலங்கை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நால்வர் அண்மையில் அகமதாபாத் சர்தார் படேல் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மேலும் பலர் நாட்டில் உள்ளனரா என்பது குறித்து பாதுகாப்பு தரப்பினரால் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கையில் ஐஎஸ் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புபட்டவர்களை கண்டறிய விசேட நடவடிக்கை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் இலங்கையில் இருக்கிறார்களா என்பதை கண்டறிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் தற்போது அவசர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.கடுவெல பிரதேசத்தில் இன்று (26) இடம்பெற்ற வெசாக் நிகழ்வில் கலந்து கொண்ட அவர் இதனை அறிவித்தார்.இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி இந்த நாட்டிலிருந்து அகமதாபாத் நகருக்கு சென்ற  இலங்கை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நால்வர் அண்மையில் அகமதாபாத் சர்தார் படேல் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதன்படி ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மேலும் பலர் நாட்டில் உள்ளனரா என்பது குறித்து பாதுகாப்பு தரப்பினரால் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement