திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள வாழைத்தோட்டம் கடற்கரையில் , மரத்தில் செய்யப்பட்ட தெப்பம் ஒன்று இன்று புதன்கிழமை (14) காலை கரையொதுங்கியுள்ளது.
இந்த தெப்பமானது மியன்மார் நாட்டிலிருந்து கடலில் விடப்பட்டு இங்கு கரையொதுங்கியிருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.
இந்த தெப்பமானது பௌத்த மத அடையாளங்களை கொண்டுள்ளது.இதனால் பௌத்த மத பூஜைகள் செய்யப்பட்டு கடலில் விடப்பட்ட இந்த தெப்பமானது கடலில் அடித்து இங்கு வந்திருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
வாழைத்தோட்டம் கடற்கரையில் மிதந்து வந்த தெப்பம் திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள வாழைத்தோட்டம் கடற்கரையில் , மரத்தில் செய்யப்பட்ட தெப்பம் ஒன்று இன்று புதன்கிழமை (14) காலை கரையொதுங்கியுள்ளது.இந்த தெப்பமானது மியன்மார் நாட்டிலிருந்து கடலில் விடப்பட்டு இங்கு கரையொதுங்கியிருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.இந்த தெப்பமானது பௌத்த மத அடையாளங்களை கொண்டுள்ளது.இதனால் பௌத்த மத பூஜைகள் செய்யப்பட்டு கடலில் விடப்பட்ட இந்த தெப்பமானது கடலில் அடித்து இங்கு வந்திருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.