• Nov 17 2024

புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த அரிய சந்தர்ப்பம் - தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட எம்.பி. ஜெகதீஸ்வரன் தெரிவிப்பு!

Tamil nila / Nov 16th 2024, 6:15 pm
image

தேர்தல் முடிவுகள் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அரிய சந்தர்ப்பத்தைத் தந்துள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ள ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் வெற்றி தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துக் கூறியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"வெளியாகிய தேர்தல் முடிவுகளின்படி தேசிய மக்கள் சக்தி வன்னி மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களைப் பெற்றுள்ளது. உண்மையில் முற்றுமுழுதாக நாங்கள் எமது பிரதேச மக்களுக்கு நன்றி கூறுகின்றோம்.

எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தி புதிய அரசை அமைத்து மக்களுக்குத்  தேவையான புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

நாடு முழுவதும் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளோம். இது புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சந்தர்ப்பத்தைத் தந்துள்ளது.

மக்கள் மயப்படுத்தப்பட்ட அனைத்து சமூகங்களுக்கும் உள்ளடக்கக் கூடிய வகையில் - அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஓர் ஆட்சியை நடத்துவோம்." - என்றார்.

புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த அரிய சந்தர்ப்பம் - தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட எம்.பி. ஜெகதீஸ்வரன் தெரிவிப்பு தேர்தல் முடிவுகள் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அரிய சந்தர்ப்பத்தைத் தந்துள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ள ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.தேசிய மக்கள் சக்தியின் வெற்றி தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துக் கூறியபோதே அவர் இவ்வாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,"வெளியாகிய தேர்தல் முடிவுகளின்படி தேசிய மக்கள் சக்தி வன்னி மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களைப் பெற்றுள்ளது. உண்மையில் முற்றுமுழுதாக நாங்கள் எமது பிரதேச மக்களுக்கு நன்றி கூறுகின்றோம்.எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தி புதிய அரசை அமைத்து மக்களுக்குத்  தேவையான புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம்.நாடு முழுவதும் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளோம். இது புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சந்தர்ப்பத்தைத் தந்துள்ளது.மக்கள் மயப்படுத்தப்பட்ட அனைத்து சமூகங்களுக்கும் உள்ளடக்கக் கூடிய வகையில் - அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஓர் ஆட்சியை நடத்துவோம்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement