• Nov 16 2024

புத்தளத்தில் மொட்டுவின் கோட்டையை தகர்ந்தெறிந்த திசைகாட்டி!

Tamil nila / Nov 16th 2024, 6:35 pm
image

கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் ஐந்து ஆசனங்களை கைப்பற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இம்முறை ஆனத்தை இழந்துள்ளது.


கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேல் புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இருந்த புத்தளம் மாவட்டத்தின் பழமையான வரலாற்றை இந்த முறை தேசிய மக்கள் சக்தி மாற்றியமைத்துள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் , மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) புத்தளத்தில் இணைந்து போட்டியிட்டன.

இதில் ஐந்து ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்றிருந்த போதிலும், அதில் இருவர் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களாவர்.


அப்போது மக்கள் விடுதலை முன்னணி சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட பி.வீரகுமார திசாநாயக்க 50,194 விருப்பு வாக்குகளையும், சமன் ஸ்ரீ ஹேரத் 38,113 விருப்பு வாக்குகளையும் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டனர்.

அதன் பின்னர் புத்தளம் மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூடுதலான ஆசனங்களை கைப்பற்றி வந்துள்ளன.


2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 220,566 வாக்குகளை பெற்றிருந்தன.

இந்த நிலையில் இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  புத்தளம் மாவட்டத்தின் ஐந்து தேர்தல் தொகுதிகளிலும் 14624 வாக்குகளை மாத்திரமே பெற்று பாரிய பின்னடைவை சந்தித்துள்ளன.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 80,183 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களை கைப்பற்றியிருந்தது.

எனினும், இம்முறை ஐக்கிய மக்கள் சக்தி புத்தளம் மாவட்டத்தில் 65,679 வாக்குகளைப் பெற்றுக் கொண்ட போதிலும் இரண்டு ஆசனங்களை பெற்றுள்ளது. 

இதேவேளை, கடந்த ஜனாதிபதி தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தேர்தல் தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் மாத்திரம் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றிருந்த போதிலும், இம்முறை பொதுத் தேர்தலில் ஐந்து தொகுதிகளிலும் வெற்றிபெற்று ஆறு ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் ஒரேயொரு சிறுபான்மை வேட்பாளராக போட்டியிட்ட பைஸல் ஆசிரியர் 42,939 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் புத்தளத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ் உட்பட ஏனைய கட்சிகளையும் சார்ந்த சிறுபான்மை அரசியல்வாதிகள் ஒற்றுமையாக ஐக்கிய தேசிய கூட்டணியாக களமிறங்கியதுடன், 55,981 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் முப்பது வருடங்களுக்கு பின்னர் புத்தளம் சிறுபான்மை மக்கள் சார்பில் அலிசப்ரி ரஹீம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.

எனினும், இந்த தேர்தலில் கூட்டணி அமைப்பது சாத்தியமற்ற நிலையில் அ.இ.ம.கா , முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இம்முறை புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட்டன.

அத்துடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் ஐக்கிய தேசிய கூட்டமைப்பு (தராசு) சின்னத்தில் போட்டியிட்ட போதிலும் அந்தக் கட்சி 5 சதவீதம் கூட வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.

இவ்வாறு புத்தளத்தில் உள்ள சிறுபான்மை அரசியல்வாதிகள் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஒற்றுமையாக ஒரு கூட்டணியாக களமிறங்கியதைப் போல, இந்த முறையும் போட்டியிட்டிருந்தால் சிறுபான்மை உறுப்பினர் ஒருவரை பெற்றிருக்க முடியும் எனவும், தேசிய மக்கள் சக்தியில. தெரிவான உறுப்பினருடன் புத்தளம் மாவட்டத்தில் இருந்து இரண்டு சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை அலங்கரித்திருப்பார்கள் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


புத்தளத்தில் மொட்டுவின் கோட்டையை தகர்ந்தெறிந்த திசைகாட்டி கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் ஐந்து ஆசனங்களை கைப்பற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இம்முறை ஆனத்தை இழந்துள்ளது.கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேல் புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இருந்த புத்தளம் மாவட்டத்தின் பழமையான வரலாற்றை இந்த முறை தேசிய மக்கள் சக்தி மாற்றியமைத்துள்ளது.கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் , மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) புத்தளத்தில் இணைந்து போட்டியிட்டன.இதில் ஐந்து ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்றிருந்த போதிலும், அதில் இருவர் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களாவர்.அப்போது மக்கள் விடுதலை முன்னணி சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட பி.வீரகுமார திசாநாயக்க 50,194 விருப்பு வாக்குகளையும், சமன் ஸ்ரீ ஹேரத் 38,113 விருப்பு வாக்குகளையும் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டனர்.அதன் பின்னர் புத்தளம் மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூடுதலான ஆசனங்களை கைப்பற்றி வந்துள்ளன.2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 220,566 வாக்குகளை பெற்றிருந்தன.இந்த நிலையில் இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  புத்தளம் மாவட்டத்தின் ஐந்து தேர்தல் தொகுதிகளிலும் 14624 வாக்குகளை மாத்திரமே பெற்று பாரிய பின்னடைவை சந்தித்துள்ளன.இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 80,183 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களை கைப்பற்றியிருந்தது.எனினும், இம்முறை ஐக்கிய மக்கள் சக்தி புத்தளம் மாவட்டத்தில் 65,679 வாக்குகளைப் பெற்றுக் கொண்ட போதிலும் இரண்டு ஆசனங்களை பெற்றுள்ளது. இதேவேளை, கடந்த ஜனாதிபதி தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தேர்தல் தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் மாத்திரம் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றிருந்த போதிலும், இம்முறை பொதுத் தேர்தலில் ஐந்து தொகுதிகளிலும் வெற்றிபெற்று ஆறு ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.புத்தளம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் ஒரேயொரு சிறுபான்மை வேட்பாளராக போட்டியிட்ட பைஸல் ஆசிரியர் 42,939 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.கடந்த 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் புத்தளத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ் உட்பட ஏனைய கட்சிகளையும் சார்ந்த சிறுபான்மை அரசியல்வாதிகள் ஒற்றுமையாக ஐக்கிய தேசிய கூட்டணியாக களமிறங்கியதுடன், 55,981 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் முப்பது வருடங்களுக்கு பின்னர் புத்தளம் சிறுபான்மை மக்கள் சார்பில் அலிசப்ரி ரஹீம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.எனினும், இந்த தேர்தலில் கூட்டணி அமைப்பது சாத்தியமற்ற நிலையில் அ.இ.ம.கா , முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இம்முறை புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட்டன.அத்துடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் ஐக்கிய தேசிய கூட்டமைப்பு (தராசு) சின்னத்தில் போட்டியிட்ட போதிலும் அந்தக் கட்சி 5 சதவீதம் கூட வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.இவ்வாறு புத்தளத்தில் உள்ள சிறுபான்மை அரசியல்வாதிகள் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஒற்றுமையாக ஒரு கூட்டணியாக களமிறங்கியதைப் போல, இந்த முறையும் போட்டியிட்டிருந்தால் சிறுபான்மை உறுப்பினர் ஒருவரை பெற்றிருக்க முடியும் எனவும், தேசிய மக்கள் சக்தியில. தெரிவான உறுப்பினருடன் புத்தளம் மாவட்டத்தில் இருந்து இரண்டு சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை அலங்கரித்திருப்பார்கள் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement