ஆப்பிரிக்காவின் ஜிம்பாப்வே நாட்டில் உள்ள பிரபல ஜாம்பேசி ரிவர் லாட்ஜ் (A’Zambezi River Lodge) ஹோட்டலுக்குள் 13 அடி நீளமுடைய முதலை ஒன்று நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முதலை முதலில் அமுலோங்கா உணவகத்தின் (Amulonga Restaurant) பஃபெ கவுண்டரை நோக்கிச் சென்று, பின்னர் உணவு தேடி சமையலறைக்குள் செல்ல முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஹோட்டல் Victoria Falls அருகில் அமைந்துள்ளதால், அங்கு தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் இச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த முதலை ஹோட்டலுக்குள் நுழைந்து, உணவகம் மூடப்பட்டிருந்ததால், அது உணவு தேடி சமையலறை பகுதிக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த முதலை உணவக கவுண்டருக்கு மேலே ஏற முயலும் காட்சி அங்குள்ள சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
பின்னர் Zimbabwe Parks and Wildlife Management Authority ரேஞ்சர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, முதலைையை பாதுகாப்பாக கட்டுப்படுத்தி மீண்டும் Zambezi River ஆற்றில் விடுவித்தனர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் சொத்துக்களுக்கு சேதமும் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இப் பகுதி அந்த முதலைகளின் இயற்கை வாழ்விடப் பகுதியாக இருப்பதால், இத்தகைய சம்பவங்கள் அபூர்வமானவை அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.
பிரபல ஹோட்டலுக்குள் உணவு தேடிச் சென்ற முதலை ஆப்பிரிக்காவின் ஜிம்பாப்வே நாட்டில் உள்ள பிரபல ஜாம்பேசி ரிவர் லாட்ஜ் (A’Zambezi River Lodge) ஹோட்டலுக்குள் 13 அடி நீளமுடைய முதலை ஒன்று நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த முதலை முதலில் அமுலோங்கா உணவகத்தின் (Amulonga Restaurant) பஃபெ கவுண்டரை நோக்கிச் சென்று, பின்னர் உணவு தேடி சமையலறைக்குள் செல்ல முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த ஹோட்டல் Victoria Falls அருகில் அமைந்துள்ளதால், அங்கு தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் இச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தனர். இந்த முதலை ஹோட்டலுக்குள் நுழைந்து, உணவகம் மூடப்பட்டிருந்ததால், அது உணவு தேடி சமையலறை பகுதிக்குச் சென்றதாக கூறப்படுகிறது.இந்நிலையில் அந்த முதலை உணவக கவுண்டருக்கு மேலே ஏற முயலும் காட்சி அங்குள்ள சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ளது. பின்னர் Zimbabwe Parks and Wildlife Management Authority ரேஞ்சர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, முதலைையை பாதுகாப்பாக கட்டுப்படுத்தி மீண்டும் Zambezi River ஆற்றில் விடுவித்தனர்.இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் சொத்துக்களுக்கு சேதமும் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இப் பகுதி அந்த முதலைகளின் இயற்கை வாழ்விடப் பகுதியாக இருப்பதால், இத்தகைய சம்பவங்கள் அபூர்வமானவை அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.