• Nov 23 2024

யாழ் சித்த மருத்துவ துறையை, பீடமாக தரமுயர்த்த கோரிக்கை..!samugammedia

mathuri / Jan 6th 2024, 8:31 pm
image

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ துறையை பீடமாக தரமுயர்த்த  வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையேயான கலந்துரையாடல் இடம்பெற்ற போதே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா ஆகியோரும் அக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில், மாணவர்களினால், மாணவ விடுதிகளில் உள்ள குறைபாடு, முகாமைத்துவ பீடத்திற்கான பேருந்து வசதிகளை ஏற்படுத்தல், சித்த மருத்துவ துறையை பீடமாக தரமுயர்த்தல், இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களுக்கான உள்ளக பயிற்சி வழங்குதல் போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


யாழ் சித்த மருத்துவ துறையை, பீடமாக தரமுயர்த்த கோரிக்கை.samugammedia யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ துறையை பீடமாக தரமுயர்த்த  வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையேயான கலந்துரையாடல் இடம்பெற்ற போதே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா ஆகியோரும் அக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.குறித்த கலந்துரையாடலில், மாணவர்களினால், மாணவ விடுதிகளில் உள்ள குறைபாடு, முகாமைத்துவ பீடத்திற்கான பேருந்து வசதிகளை ஏற்படுத்தல், சித்த மருத்துவ துறையை பீடமாக தரமுயர்த்தல், இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களுக்கான உள்ளக பயிற்சி வழங்குதல் போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement