• Dec 12 2024

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் பாடசாலை மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு...!

Sharmi / Mar 1st 2024, 10:03 am
image

யாழ்.சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை ஐயா கடை சந்திப் பகுதியில் இன்று(01)  காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன்  ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவனே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து,   பாடசாலையில் விளையாட்டுப் பயிற்சியை முடித்து விட்டு துவிச்சக்கரவண்டியில் வீடு திரும்பிய மாணவனை மோதியதில் அம் மாணவன் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில்,  மேலதிக சிகிச்சைக்காக குறித்த மாணவன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த  நிலையில்  உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்தில் மீசாலை கிழக்கைச் சேர்ந்த 18 வயதான சிவநாவலன் பரணிதரன் என்ற மாணவனே  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, விபத்துடன் தொடர்புடைய இ.போ.ச பேருந்து சாரதி  சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.













யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் பாடசாலை மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு. யாழ்.சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை ஐயா கடை சந்திப் பகுதியில் இன்று(01)  காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன்  ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவனே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து,   பாடசாலையில் விளையாட்டுப் பயிற்சியை முடித்து விட்டு துவிச்சக்கரவண்டியில் வீடு திரும்பிய மாணவனை மோதியதில் அம் மாணவன் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.இந்நிலையில்,  மேலதிக சிகிச்சைக்காக குறித்த மாணவன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த  நிலையில்  உயிரிழந்துள்ளார்.இவ் விபத்தில் மீசாலை கிழக்கைச் சேர்ந்த 18 வயதான சிவநாவலன் பரணிதரன் என்ற மாணவனே  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை, விபத்துடன் தொடர்புடைய இ.போ.ச பேருந்து சாரதி  சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement