• Nov 14 2024

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பாடசாலை மாணவன் படுகாயம்..!

Sharmi / Aug 28th 2024, 11:21 am
image

மூதூர்- ஸ்ரீ நாராயணபுரம் பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவர் யானையின் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று(28) இடம்பெற்றது. 

கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்று வரும் ஜெயதீபன் கிருஷ்ணபிரசாத்(வயது 16) என்ற மாணவரே படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீ நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன் இன்று(28) அதிகாலை 5.30 மணியளவில் கிளிவெட்டி மகா வித்தியாலயத்திற்கு பிரத்தியேக வகுப்பு ஒன்றிற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றபோது ஸ்ரீ நாராயணர் ஆலயத்திற்கு முன்பாக வைத்து யானை தாக்கியுள்ளதாக தெரியவருகின்றது. 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று (27) இரவு முதல் காட்டு யானைகளின் நடமாட்டம் அப்பகுதியில் இருந்ததாகவும், நீண்டகாலமாக மூதூர் பகுதியில் காட்டு யானைகளினால் தொடர்ச்சியான பல தாக்குதல் சம்பவங்களும் உயிரிழப்புச் சம்பவங்களும் பதிவாகி வருவதோடு பயிர்களையும் சேதம் செய்து வருவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றார்கள். 

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பாடசாலை மாணவன் படுகாயம். மூதூர்- ஸ்ரீ நாராயணபுரம் பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவர் யானையின் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று(28) இடம்பெற்றது. கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்று வரும் ஜெயதீபன் கிருஷ்ணபிரசாத்(வயது 16) என்ற மாணவரே படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஸ்ரீ நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன் இன்று(28) அதிகாலை 5.30 மணியளவில் கிளிவெட்டி மகா வித்தியாலயத்திற்கு பிரத்தியேக வகுப்பு ஒன்றிற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றபோது ஸ்ரீ நாராயணர் ஆலயத்திற்கு முன்பாக வைத்து யானை தாக்கியுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.நேற்று (27) இரவு முதல் காட்டு யானைகளின் நடமாட்டம் அப்பகுதியில் இருந்ததாகவும், நீண்டகாலமாக மூதூர் பகுதியில் காட்டு யானைகளினால் தொடர்ச்சியான பல தாக்குதல் சம்பவங்களும் உயிரிழப்புச் சம்பவங்களும் பதிவாகி வருவதோடு பயிர்களையும் சேதம் செய்து வருவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றார்கள். 

Advertisement

Advertisement

Advertisement