• Oct 13 2026

இலங்கைக்கு கடும் எச்சரிக்கை! அடுத்த சில மணிநேரங்களில் என்ன நடக்கப்போகிறது?

Chithra / Oct 13th 2026, 12:38 pm
image


இலங்கையின் ஆறு மாகாணங்களில் வசிக்கும் மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.


இன்று மாலை முதல் இரவு வரை பல பகுதிகளில் ஆபத்தான வானிலை நிலவக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் கடுமையான மின்னல் தாக்கத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த மின்னல் எச்சரிக்கை, நாளை அதிகாலை ஒரு மணி வரை அமுலில் இருக்கும்.


ஆனால், இதைவிட முக்கியமான மற்றுமொரு எச்சரிக்கையையும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.


அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் 100 முதல் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கான அம்பர் எச்சரிக்கை நாளை மாலை 6.30 மணி வரை நடைமுறையில் இருக்கும்.


மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும்போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.


எனவே, மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்க்க பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.



இலங்கைக்கு கடும் எச்சரிக்கை அடுத்த சில மணிநேரங்களில் என்ன நடக்கப்போகிறது இலங்கையின் ஆறு மாகாணங்களில் வசிக்கும் மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.இன்று மாலை முதல் இரவு வரை பல பகுதிகளில் ஆபத்தான வானிலை நிலவக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் கடுமையான மின்னல் தாக்கத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த மின்னல் எச்சரிக்கை, நாளை அதிகாலை ஒரு மணி வரை அமுலில் இருக்கும்.ஆனால், இதைவிட முக்கியமான மற்றுமொரு எச்சரிக்கையையும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் 100 முதல் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான அம்பர் எச்சரிக்கை நாளை மாலை 6.30 மணி வரை நடைமுறையில் இருக்கும்.மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும்போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.எனவே, மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்க்க பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement