வடக்கு மாகாண விவசாய அமைச்சும் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தும் உலக மண் தின நிகழ்வும் அறுவடை சஞ்சிகை வெளியீடும் இன்று(12) சிறப்புற நடைபெற்றது.
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சண்முகராஜா சிவஸ்ரீ தலைமையில், "ஆரோக்கியமான நகரங்களுக்கு ஆரோக்கியமான மண்" எனும் தொனிப்பொருளில் சிறப்புற நடைபெற்றது.
உலக மண் தினம் (World Soil Day) ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 05ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், குறித்த நாளில் நடைபெறவிருந்த இந்நிகழ்வு அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பிற்போடப்பட்டு இன்றைய தினம் இவ்வாறு நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
நிகழ்வில் விருந்தினர்களை வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து தேசிய மற்றும் மாகாண கொடிகள் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக விவசாய பீட மாணவர்கள் வழங்கும் மண் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாட்டு கண்காட்சியினை அதிதிகள் பார்வையிட்டனர்.
மங்கள விளக்கேற்றப்பட்டு, வரவேற்பு நடனத்தினை இணுவில் திருநெறிய தமிழ் மறைக் கலாமன்ற மாணவிகள் வழங்கினர்.
வரவேற்புரையினை வடக்கு மாகாண விவசாய அமைச்சின் உதவிச் செயலாளர் ராதிகா சன்சீவன் நிகழ்த்தினார்.
கலை நிகழ்வுகள், விருந்தினர்களின் உரைகள், உலக மண் தினம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில் வழங்கல், அறுவடை சஞ்சிகை வெளியீடு முதலான பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
மேலும் உலக மண் தினத்தை ஒட்டிய சிறப்புரையினை "மண் ஆரோக்கியம்: பசுமை உலகின் அடித்தளம்” எனும் தலைப்பில் யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தின் விவசாய இரசாயனவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அம்பிகை ஷயந்தன் நிகழ்த்தினார்.
சிறந்த சூழல் நேய பாடசாலைத் தோட்டப் போட்டிக்கான(Environmental friendly school gardening) பரிசில் வழங்கும் நிகழ்வில் கிளி/விவேகானந்தா வித்தியாலயம், கிளி/முருகானந்தா கல்லூரி, கிளி/இயக்கச்சி மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் பெற்றுக்கொண்டன.
இந் நிகழ்வில் வடக்கு மாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு மற்றும் அதன் கீழான திணைக்களங்களின் அதிகாரிகள், மாவட்ட செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், கல்வித் திணைக்கள அதிகாரிகள், யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தின் பீடாதிபதி, விவசாய பீடத்தின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள், விவசாயிகள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கிளிநொச்சியில் சிறப்புற நடைபெற்ற உலக மண் தின நிகழ்வு வடக்கு மாகாண விவசாய அமைச்சும் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தும் உலக மண் தின நிகழ்வும் அறுவடை சஞ்சிகை வெளியீடும் இன்று(12) சிறப்புற நடைபெற்றது.வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சண்முகராஜா சிவஸ்ரீ தலைமையில், "ஆரோக்கியமான நகரங்களுக்கு ஆரோக்கியமான மண்" எனும் தொனிப்பொருளில் சிறப்புற நடைபெற்றது.உலக மண் தினம் (World Soil Day) ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 05ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், குறித்த நாளில் நடைபெறவிருந்த இந்நிகழ்வு அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பிற்போடப்பட்டு இன்றைய தினம் இவ்வாறு நடைபெற்றது.கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.மேலும் சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.நிகழ்வில் விருந்தினர்களை வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து தேசிய மற்றும் மாகாண கொடிகள் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக விவசாய பீட மாணவர்கள் வழங்கும் மண் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாட்டு கண்காட்சியினை அதிதிகள் பார்வையிட்டனர்.மங்கள விளக்கேற்றப்பட்டு, வரவேற்பு நடனத்தினை இணுவில் திருநெறிய தமிழ் மறைக் கலாமன்ற மாணவிகள் வழங்கினர்.வரவேற்புரையினை வடக்கு மாகாண விவசாய அமைச்சின் உதவிச் செயலாளர் ராதிகா சன்சீவன் நிகழ்த்தினார்.கலை நிகழ்வுகள், விருந்தினர்களின் உரைகள், உலக மண் தினம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில் வழங்கல், அறுவடை சஞ்சிகை வெளியீடு முதலான பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.மேலும் உலக மண் தினத்தை ஒட்டிய சிறப்புரையினை "மண் ஆரோக்கியம்: பசுமை உலகின் அடித்தளம்” எனும் தலைப்பில் யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தின் விவசாய இரசாயனவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அம்பிகை ஷயந்தன் நிகழ்த்தினார்.சிறந்த சூழல் நேய பாடசாலைத் தோட்டப் போட்டிக்கான(Environmental friendly school gardening) பரிசில் வழங்கும் நிகழ்வில் கிளி/விவேகானந்தா வித்தியாலயம், கிளி/முருகானந்தா கல்லூரி, கிளி/இயக்கச்சி மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் பெற்றுக்கொண்டன.இந் நிகழ்வில் வடக்கு மாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு மற்றும் அதன் கீழான திணைக்களங்களின் அதிகாரிகள், மாவட்ட செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், கல்வித் திணைக்கள அதிகாரிகள், யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தின் பீடாதிபதி, விவசாய பீடத்தின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள், விவசாயிகள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.