• Apr 15 2026

நண்பர்களுடன் கடலில் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட மாணவன் நீரில் மூழ்கி பலி

Chithra / Mar 19th 2026, 9:20 am
image


காலி மாவட்டம் ஹபராதுவ, ஹெண்டிவத்த பகுதியில் கடலில் நீராடிய சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவர் ஹபராதுவ பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 

குறித்த சிறுவன் சில நண்பர்களுடன் இணைந்து கடலில் 'சறுக்கு விளையாட்டில்'  ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே நீரில் மூழ்கியுள்ளார்.


இதன்போது, பிரதேசவாசிகள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் அவர் மீட்கப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.


சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்


இதேவேளை பண்டாரகம பகுதியில் அமைந்துள்ள உயன்வத்த வாவியில் நீராடிக்கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.


நேற்றுமுன்தினம் இப்பகுதியில் நீராடிக்கொண்டிருந்த போதே குறித்த நபர் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளார்.


காணாமற்போன நபர் கோனபொல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.


சம்பவ தினத்தன்று அவர் மேலும் சில நண்பர்களுடன் கூடி வாவியில் நீராடியுள்ளதுடன் இதன்போதே அவர் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


குறித்த நபர் தொடர்பில் கடற்படை சுழியோடிப் பிரிவினரின் உதவியுடன் பண்டாரகம பொலிஸார் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நண்பர்களுடன் கடலில் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட மாணவன் நீரில் மூழ்கி பலி காலி மாவட்டம் ஹபராதுவ, ஹெண்டிவத்த பகுதியில் கடலில் நீராடிய சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் ஹபராதுவ பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சிறுவன் சில நண்பர்களுடன் இணைந்து கடலில் 'சறுக்கு விளையாட்டில்'  ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே நீரில் மூழ்கியுள்ளார்.இதன்போது, பிரதேசவாசிகள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் அவர் மீட்கப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்இதேவேளை பண்டாரகம பகுதியில் அமைந்துள்ள உயன்வத்த வாவியில் நீராடிக்கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.நேற்றுமுன்தினம் இப்பகுதியில் நீராடிக்கொண்டிருந்த போதே குறித்த நபர் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளார்.காணாமற்போன நபர் கோனபொல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.சம்பவ தினத்தன்று அவர் மேலும் சில நண்பர்களுடன் கூடி வாவியில் நீராடியுள்ளதுடன் இதன்போதே அவர் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.குறித்த நபர் தொடர்பில் கடற்படை சுழியோடிப் பிரிவினரின் உதவியுடன் பண்டாரகம பொலிஸார் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement