மாத்தறையில் நீச்சல் குளத்தில் விழுந்த கிரிக்கெட் பந்தை எடுக்கச் சென்ற பாடசாலை மாணவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.
திக்வெல்ல விஜித மகா வித்தியாலயத்தில் 12 ஆம் வகுப்பில் கல்வி கற்று வந்த 17 வயதான பாடசாலை மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த மாணவர் பாடசாலை மைதானத்தில் ஏனைய மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது, அதே பாடசாலையின் நீச்சல் குளத்தில் கிரிக்கெட் பந்து விழுந்த நிலையில், அதை எடுக்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டது.
சடலம் பதிகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,
சம்பவம் குறித்து திக்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீச்சல் குளத்தில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற மாணவன் பலி மாத்தறையில் நீச்சல் குளத்தில் விழுந்த கிரிக்கெட் பந்தை எடுக்கச் சென்ற பாடசாலை மாணவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். திக்வெல்ல விஜித மகா வித்தியாலயத்தில் 12 ஆம் வகுப்பில் கல்வி கற்று வந்த 17 வயதான பாடசாலை மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். குறித்த மாணவர் பாடசாலை மைதானத்தில் ஏனைய மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது, அதே பாடசாலையின் நீச்சல் குளத்தில் கிரிக்கெட் பந்து விழுந்த நிலையில், அதை எடுக்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டது. சடலம் பதிகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து திக்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.