• Jun 29 2025

திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை - 146 பயணிகளுடன் புறப்படவிருந்த விமானம் ரத்து

Chithra / Jun 29th 2025, 3:24 pm
image

 

சென்னையில் இருந்து தாய்லாந்து நோக்கிப் புறப்படவிருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டதால் குறித்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து தலைநகர் பேங்கொக் நோக்கி 146 பயணிகளுடன், தாய் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் புறப்பட ஆயத்தமானது. 

இதையடுத்து விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையை விமானி கண்டறிந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப பிரச்சினை சரி செய்யப்பட்டு இன்று இரவு அல்லது நாளை காலை தாய்லாந்திற்குப் புறப்படும் என தாய் ஏர்வேஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.


திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை - 146 பயணிகளுடன் புறப்படவிருந்த விமானம் ரத்து  சென்னையில் இருந்து தாய்லாந்து நோக்கிப் புறப்படவிருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டதால் குறித்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து தலைநகர் பேங்கொக் நோக்கி 146 பயணிகளுடன், தாய் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் புறப்பட ஆயத்தமானது. இதையடுத்து விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையை விமானி கண்டறிந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப பிரச்சினை சரி செய்யப்பட்டு இன்று இரவு அல்லது நாளை காலை தாய்லாந்திற்குப் புறப்படும் என தாய் ஏர்வேஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement