• Feb 21 2025

போதை மாத்திரைகளுடன் யாழில் சந்தேகநபர் ஒருவர் கைது..!

Sharmi / Feb 20th 2025, 4:03 pm
image

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை, இலந்தைக்குளம் பகுதியில் நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம்(20) பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதன்போது அவரிடமிருந்து 30 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைதான குறித்த சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

போதை மாத்திரைகளுடன் யாழில் சந்தேகநபர் ஒருவர் கைது. யாழ்ப்பாணம் கொழும்புத்துறை, இலந்தைக்குளம் பகுதியில் நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம்(20) பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 30 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.கைதான குறித்த சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement