• Aug 15 2026

நீதிக்காக மீண்டும் திரண்ட மக்கள்: செம்மணி நினைவுத் தூபியில் உணர்ச்சிப்பூர்வ கவனயீர்ப்புப் போராட்டம்!

Tamil nila / Aug 14th 2026, 9:08 pm
image

யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழி விவகாரத்திற்கு சர்வதேச ரீதியில் நீதி பெற்றுத்தரக் கோரி, “நீதியின் ஓலம் – இரண்டு” என்ற கவனயீர்ப்புப் போராட்டம் இன்று (14) காலை உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.

செம்மணி நினைவுத் தூபி வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டம், தாயகச் செயலணியின் பிரதான ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, செம்மணி நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், சுடரேற்றப்பட்டு உயிரிழந்தவர்களின் ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மனித புதைகுழி விவகாரத்தில் உண்மை வெளிக்கொணரப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியதுடன், செம்மணி விவகாரத்தில் சர்வதேச ரீதியான நீதிக்கான கோரிக்கையையும் வலியுறுத்தியுள்ளனர்.


இன்று ஆரம்பமாகியுள்ள இப்போராட்டம் எதிர்வரும் 16-ஆம் திகதி வரை செம்மணி நினைவுத் தூபிக்கு அருகில் இரவு பகலாகத் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.

இறுதி நாளான 17-ஆம் திகதி யாழ்ப்பாண நகரப் பகுதியில் ஆரம்பமாகும் போராட்டப் பேரணியானது, நல்லூர் கோயில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் (UN) முகவராண்மை அலுவலகத்தை சென்றடையவுள்ளது.

அங்கு சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செம்மணி புதைகுழி குறித்த முக்கிய கோரிக்கை மகஜர் ஐ.நா பிரதிநிதிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படவுள்ளது.

நீதிக்காக மீண்டும் திரண்ட மக்கள்: செம்மணி நினைவுத் தூபியில் உணர்ச்சிப்பூர்வ கவனயீர்ப்புப் போராட்டம் யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழி விவகாரத்திற்கு சர்வதேச ரீதியில் நீதி பெற்றுத்தரக் கோரி, “நீதியின் ஓலம் – இரண்டு” என்ற கவனயீர்ப்புப் போராட்டம் இன்று (14) காலை உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.செம்மணி நினைவுத் தூபி வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டம், தாயகச் செயலணியின் பிரதான ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதன்போது, செம்மணி நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், சுடரேற்றப்பட்டு உயிரிழந்தவர்களின் ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.மனித புதைகுழி விவகாரத்தில் உண்மை வெளிக்கொணரப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியதுடன், செம்மணி விவகாரத்தில் சர்வதேச ரீதியான நீதிக்கான கோரிக்கையையும் வலியுறுத்தியுள்ளனர்.இன்று ஆரம்பமாகியுள்ள இப்போராட்டம் எதிர்வரும் 16-ஆம் திகதி வரை செம்மணி நினைவுத் தூபிக்கு அருகில் இரவு பகலாகத் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.இறுதி நாளான 17-ஆம் திகதி யாழ்ப்பாண நகரப் பகுதியில் ஆரம்பமாகும் போராட்டப் பேரணியானது, நல்லூர் கோயில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் (UN) முகவராண்மை அலுவலகத்தை சென்றடையவுள்ளது.அங்கு சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செம்மணி புதைகுழி குறித்த முக்கிய கோரிக்கை மகஜர் ஐ.நா பிரதிநிதிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement