• Oct 02 2026

“இந்த மாதமாவது தீர்வு கிடைக்குமா?” – மயிலிட்டி மக்கள் கேள்வி

Chithra / Oct 2nd 2026, 11:33 am
image


தமது பூர்வீக காணிகளை மீள விடுவிக்கக் கோரி மயிலிட்டி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று (02) 24ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்டது.


பல ஆண்டுகளாக தமது பூர்வீக நிலங்களை இழந்து, அவற்றை மீளப் பெற்றுக்கொள்வதற்காக தொடர்ச்சியாக போராடி வரும் நிலையில், தற்போதைய அரசாங்கமும் தமது எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறி வருவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


கடந்த ஆட்சிக் காலங்களில் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட காணிகளை மீண்டும் பெருமளவில் விடுவிக்கப் போவதாக அரசாங்கம் தொடர்ந்து தெரிவித்து வருவதாகவும், எனினும் இதுவரை புதிதாக குறிப்பிடத்தக்க அளவிலான காணிகள் விடுவிக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.


இதனால், இந்த மாதத்திலாவது தமது பூர்வீக காணிகள் தொடர்பான கோரிக்கைக்கு தீர்வு கிடைக்குமா அல்லது மீண்டும் ஏமாற்றமே எஞ்சுமா என்ற கேள்வியை மயிலிட்டி மக்கள் எழுப்பியுள்ளனர்.


இந்நிலையில், தமது கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவதற்கு மக்கள் தீர்மானித்துள்ளனர்.


அதன்படி, இன்னும் ஓரிரு வாரங்களில் மயிலிட்டி மக்கள் ஒன்றிணைந்து பாரிய அளவிலான போராட்டமொன்றை முன்னெடுக்கத் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமது பூர்வீக காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டு, மீள்குடியேற்றத்திற்கான உரிய வாய்ப்பு வழங்கப்படும் வரை தங்களது போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் மயிலிட்டி மக்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

“இந்த மாதமாவது தீர்வு கிடைக்குமா” – மயிலிட்டி மக்கள் கேள்வி தமது பூர்வீக காணிகளை மீள விடுவிக்கக் கோரி மயிலிட்டி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று (02) 24ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்டது.பல ஆண்டுகளாக தமது பூர்வீக நிலங்களை இழந்து, அவற்றை மீளப் பெற்றுக்கொள்வதற்காக தொடர்ச்சியாக போராடி வரும் நிலையில், தற்போதைய அரசாங்கமும் தமது எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறி வருவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.கடந்த ஆட்சிக் காலங்களில் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட காணிகளை மீண்டும் பெருமளவில் விடுவிக்கப் போவதாக அரசாங்கம் தொடர்ந்து தெரிவித்து வருவதாகவும், எனினும் இதுவரை புதிதாக குறிப்பிடத்தக்க அளவிலான காணிகள் விடுவிக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.இதனால், இந்த மாதத்திலாவது தமது பூர்வீக காணிகள் தொடர்பான கோரிக்கைக்கு தீர்வு கிடைக்குமா அல்லது மீண்டும் ஏமாற்றமே எஞ்சுமா என்ற கேள்வியை மயிலிட்டி மக்கள் எழுப்பியுள்ளனர்.இந்நிலையில், தமது கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவதற்கு மக்கள் தீர்மானித்துள்ளனர்.அதன்படி, இன்னும் ஓரிரு வாரங்களில் மயிலிட்டி மக்கள் ஒன்றிணைந்து பாரிய அளவிலான போராட்டமொன்றை முன்னெடுக்கத் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமது பூர்வீக காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டு, மீள்குடியேற்றத்திற்கான உரிய வாய்ப்பு வழங்கப்படும் வரை தங்களது போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் மயிலிட்டி மக்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement