• May 23 2026

அளவுநாடா மின்கம்பியில் பட்டதால் வந்த விபரீதம் ; மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழப்பு!

shanu / Dec 27th 2025, 9:19 pm
image


வீட்டில் மின்சாரம் தாக்கி  7 வயது சிறுமி ஒருவர்  இன்று உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 


‎மாத்தறை மாவட்டத்தின் வரல்ல பகுதியை சேர்ந்த சிறுமியே இவ்வாறு  மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


வீட்டில் சிறுமி  வைத்திருந்த அளவிடும் நாடா வீட்டோடு இணைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியின் இரண்டு கம்பிகளில் பட்டதால் மின்சாரம் தாக்கியுள்ளது.


மின்சாரம் தாக்கிய சிறுமியை உடனடியாக  மொரவாக்கவில் உள்ள கொஸ்னில்கொட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 


எனினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே  அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அளவுநாடா மின்கம்பியில் பட்டதால் வந்த விபரீதம் ; மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழப்பு வீட்டில் மின்சாரம் தாக்கி  7 வயது சிறுமி ஒருவர்  இன்று உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ‎மாத்தறை மாவட்டத்தின் வரல்ல பகுதியை சேர்ந்த சிறுமியே இவ்வாறு  மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.வீட்டில் சிறுமி  வைத்திருந்த அளவிடும் நாடா வீட்டோடு இணைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியின் இரண்டு கம்பிகளில் பட்டதால் மின்சாரம் தாக்கியுள்ளது.மின்சாரம் தாக்கிய சிறுமியை உடனடியாக  மொரவாக்கவில் உள்ள கொஸ்னில்கொட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே  அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement