ஹட்டன் - கண்டி பிரதான வீதியில் ஹட்டன் ஸ்டிரதன் தோட்ட பகுதியில் இன்றையதினம் முச்சக்கர வண்டி தீப்பிடித்து எரிந்தத சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டியின் சாரதி, ஹட்டன் நகரில் உள்ள ஒரு பெட்ரோல் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருள் நிரப்பிக்கொண்டு, மேலும் இரண்டு பயணிகளுடன் கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, முச்சக்கர வண்டியின் பின்புறத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்
பிரதான வீதியில் பயணித்த வாகன சாரதிகளும், பிரதேச மக்களும் தீப்பிடித்து எரிந்த முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
எரிபொருள் கசிவவினாலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கப்படுவதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை, முச்சக்கர வண்டி தீ விபத்தில் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்
ஹட்டனில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி - நடந்தது என்ன ஹட்டன் - கண்டி பிரதான வீதியில் ஹட்டன் ஸ்டிரதன் தோட்ட பகுதியில் இன்றையதினம் முச்சக்கர வண்டி தீப்பிடித்து எரிந்தத சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.முச்சக்கர வண்டியின் சாரதி, ஹட்டன் நகரில் உள்ள ஒரு பெட்ரோல் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருள் நிரப்பிக்கொண்டு, மேலும் இரண்டு பயணிகளுடன் கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, முச்சக்கர வண்டியின் பின்புறத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்பிரதான வீதியில் பயணித்த வாகன சாரதிகளும், பிரதேச மக்களும் தீப்பிடித்து எரிந்த முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.எரிபொருள் கசிவவினாலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கப்படுவதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை, முச்சக்கர வண்டி தீ விபத்தில் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்