• Sep 01 2025

வவுனியாவில் திடீரென தீப்பற்றிய களஞ்சியசாலை; ஒரு தொகுதி விவசாய உபகரணங்கள் நாசம்!

shanuja / Aug 30th 2025, 9:35 pm
image

வவுனியாவில் அமைந்துள்ள கடைத் தொகுதி ஒன்றில் திடீரென இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வவுனியா, முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள விவசாய உபகரணங்கள் விற்பனை  களஞ்சியசாலையில் திடீரென தீப்பற்றியுள்ளது. 

தீப்பற்றியதையடுத்து  கடை உரிமையாளரால் வவுனியா  பொலிஸார் மற்றும் வவுனியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு என்பவற்றுக்கு அறிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த தீயணைப்புப் பிரிவினரும், வவுனியா பொலிஸாரும் இணைந்து பல மணிநேர போராட்டத்தின் பின்  தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும் ஒரு தொகுதி விவசாய உபகரணங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது என விற்பனை உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

திடீரென தீப்பற்றியதற்கான காரணம் இதுவரையில் கண்டறியாத நிலையில்  வவுனியா பெலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் திடீரென தீப்பற்றிய களஞ்சியசாலை; ஒரு தொகுதி விவசாய உபகரணங்கள் நாசம் வவுனியாவில் அமைந்துள்ள கடைத் தொகுதி ஒன்றில் திடீரென இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.வவுனியா, முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள விவசாய உபகரணங்கள் விற்பனை  களஞ்சியசாலையில் திடீரென தீப்பற்றியுள்ளது. தீப்பற்றியதையடுத்து  கடை உரிமையாளரால் வவுனியா  பொலிஸார் மற்றும் வவுனியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு என்பவற்றுக்கு அறிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு வருகை தந்த தீயணைப்புப் பிரிவினரும், வவுனியா பொலிஸாரும் இணைந்து பல மணிநேர போராட்டத்தின் பின்  தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.இருப்பினும் ஒரு தொகுதி விவசாய உபகரணங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது என விற்பனை உரிமையாளர் தெரிவித்துள்ளார். திடீரென தீப்பற்றியதற்கான காரணம் இதுவரையில் கண்டறியாத நிலையில்  வவுனியா பெலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement