• Jun 04 2026

அயல் வீட்டுப் பெண்ணுடன் சேர்ந்து கணவனை அடித்துக் கொன்ற மனைவி

Chithra / Feb 25th 2026, 9:33 am
image


களுத்துறை - ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போருவதண்ட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


இவ்வாறு உயிரிழந்தவர் போருவதண்ட பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபராவார்.


இந்தக் கொலை நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக ஹொரணை பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


போருவதண்ட பகுதியைச் சேர்ந்த நபர் தனது வீட்டின் பக்கத்திலுள்ள மற்றுமொரு வீட்டிற்குச் சென்று கதவுகள் மற்றும் ஜன்னல்களை சேதப்படுத்தியுள்ளார். 


இதனால், குறித்த வீட்டினுள் இருந்த பெண் அந்த நபரின் மனைவியிடம் சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.


சம்பவ இடத்திற்குச் சென்ற மனைவியும், மற்றைய பெண்ணும் சேர்ந்து மரக் கம்பத்தால் அந்த நபரைத் தாக்கியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரிய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அயல் வீட்டுப் பெண்ணுடன் சேர்ந்து கணவனை அடித்துக் கொன்ற மனைவி களுத்துறை - ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போருவதண்ட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் போருவதண்ட பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபராவார்.இந்தக் கொலை நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக ஹொரணை பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.போருவதண்ட பகுதியைச் சேர்ந்த நபர் தனது வீட்டின் பக்கத்திலுள்ள மற்றுமொரு வீட்டிற்குச் சென்று கதவுகள் மற்றும் ஜன்னல்களை சேதப்படுத்தியுள்ளார். இதனால், குறித்த வீட்டினுள் இருந்த பெண் அந்த நபரின் மனைவியிடம் சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.சம்பவ இடத்திற்குச் சென்ற மனைவியும், மற்றைய பெண்ணும் சேர்ந்து மரக் கம்பத்தால் அந்த நபரைத் தாக்கியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரிய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement