வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் கடற்றொழிலுக்காக வந்திருந்த இளைஞர் ஒருவர், ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றையதினம்(03) இரவு இடம்பெற்றது.
இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் கண்ணகி நகர் விசுவமடுவைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
தொழில் நிமித்தம் கட்டைக்காட்டுப் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்ததாகவும் நேற்றையதினம்(03) இரவு அவர் வீதியில் இனம்தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட நிலையில் சுயநினைவிழந்த நிலையில் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மருதங்கேணிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இளைஞன். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் கடற்றொழிலுக்காக வந்திருந்த இளைஞர் ஒருவர், ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றையதினம்(03) இரவு இடம்பெற்றது.இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் கண்ணகி நகர் விசுவமடுவைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுதொழில் நிமித்தம் கட்டைக்காட்டுப் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்ததாகவும் நேற்றையதினம்(03) இரவு அவர் வீதியில் இனம்தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட நிலையில் சுயநினைவிழந்த நிலையில் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மருதங்கேணிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.