• Feb 14 2026

காத்தான்குடியில் சிகை அலங்கார நிலையத்தில் இளைஞன் மீது கத்திக்குத்து; பொலிஸில் சரண் பயங்கரம்

Chithra / Dec 18th 2025, 6:51 pm
image


மட்டக்களப்பு - காத்தான்குடியிலுள்ள சிகை அலங்கார நிலையமொன்றில் வைத்து இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 


கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட இளைஞன் அங்கிருந்து தப்பியோடி, பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.


இந்த கத்தி குத்துதாக்குதலில் 25 வயதுடைய இளைஞனே படுகாயமடைந்துள்ளார். 


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 


காத்தான்குடி 06 அப்துல் லத்தீப் சின்னலெவ்வை மாவத்தையிலுள்ள சிகை அலங்கார நிலையத்தில் சம்பவ தினமான இன்று காலை, இளைஞர் ஒருவர் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அங்கு உள்நுழைந்த மற்றுமொரு இளைஞன், குறித்த இளைஞர் மீது கத்தியால் குத்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.


இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதலை நடத்தியவர் பொலிஸில் சரணடைந்துள்ளார். 


கத்திக் குத்துக்கு இலக்கான இளைஞனுக்கும்  கத்தியால் குத்திய இளைஞனுக்கும் இடையே  ஒரு சில தினங்களாக வாய்த்தர்க்கம் மற்றும் கைகலப்பு இடம்பெற்று வந்த நிலையிலேயே இந்த கத்திக் குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.


இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தடயவியல் பிரிவு பொலிசார் வரவழைக்கப்பட்டு  விசாரணைகளை மேற்கொண்டதுடன் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.


காத்தான்குடியில் சிகை அலங்கார நிலையத்தில் இளைஞன் மீது கத்திக்குத்து; பொலிஸில் சரண் பயங்கரம் மட்டக்களப்பு - காத்தான்குடியிலுள்ள சிகை அலங்கார நிலையமொன்றில் வைத்து இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட இளைஞன் அங்கிருந்து தப்பியோடி, பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.இந்த கத்தி குத்துதாக்குதலில் 25 வயதுடைய இளைஞனே படுகாயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் காத்தான்குடி 06 அப்துல் லத்தீப் சின்னலெவ்வை மாவத்தையிலுள்ள சிகை அலங்கார நிலையத்தில் சம்பவ தினமான இன்று காலை, இளைஞர் ஒருவர் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அங்கு உள்நுழைந்த மற்றுமொரு இளைஞன், குறித்த இளைஞர் மீது கத்தியால் குத்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதலை நடத்தியவர் பொலிஸில் சரணடைந்துள்ளார். கத்திக் குத்துக்கு இலக்கான இளைஞனுக்கும்  கத்தியால் குத்திய இளைஞனுக்கும் இடையே  ஒரு சில தினங்களாக வாய்த்தர்க்கம் மற்றும் கைகலப்பு இடம்பெற்று வந்த நிலையிலேயே இந்த கத்திக் குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தடயவியல் பிரிவு பொலிசார் வரவழைக்கப்பட்டு  விசாரணைகளை மேற்கொண்டதுடன் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement