மூச்செடுக்க சிரமப்பட்ட இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றையதினம் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய அஜித்குமார் ரவீணா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் கடந்த 31ஆம் திகதி சுவாசிக்க சிரமப்பட்டுள்ளார். பின்னர் முதலாம் திகதி காலை கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டுள்ளார். அதன்பின்னர் 3ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இருப்பினும் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சுவாசிக்க சிரமப்பட்ட இளம் குடும்பப் பெண்; தீவிர சிகிச்சையின் பின் யாழில் நடந்த சோகம் மூச்செடுக்க சிரமப்பட்ட இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றையதினம் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய அஜித்குமார் ரவீணா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,இவர் கடந்த 31ஆம் திகதி சுவாசிக்க சிரமப்பட்டுள்ளார். பின்னர் முதலாம் திகதி காலை கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டுள்ளார். அதன்பின்னர் 3ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இருப்பினும் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.