கண்டி மாவட்டம், பன்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளம் யுவதி ஒருவர் தனது வீட்டின் கட்டிலில் சந்தேகத்துக்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், பன்வில பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
நேற்று மாலை மேற்படி யுவதியின் பெற்றோர், உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, அந்த யுவதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
பின்னர், வெளியில் சென்றிருந்த பெற்றோர் இரவு மீண்டும் வீட்டுக்குத் திரும்பிய போதே, மகள் கட்டிலில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சடலம் மீட்கப்படும் போது அந்த யுவதியின் வாய்ப் பகுதியில் இருந்து அதிகளவில் இரத்தம் வெளியேறியிருந்தது என்று பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யுவதியின் மரணத்தில் பலத்த சந்தேகம் காணப்படுவதால் பொலிஸார் மற்றும் தடயவியல் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாயில் இரத்தக் கறைகளுடன் சடலமாக கிடந்த யுவதி பெற்றோர் வீடு திரும்பியபோது அதிர்ச்சி கண்டி மாவட்டம், பன்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளம் யுவதி ஒருவர் தனது வீட்டின் கட்டிலில் சந்தேகத்துக்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், பன்வில பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.நேற்று மாலை மேற்படி யுவதியின் பெற்றோர், உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, அந்த யுவதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். பின்னர், வெளியில் சென்றிருந்த பெற்றோர் இரவு மீண்டும் வீட்டுக்குத் திரும்பிய போதே, மகள் கட்டிலில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.சடலம் மீட்கப்படும் போது அந்த யுவதியின் வாய்ப் பகுதியில் இருந்து அதிகளவில் இரத்தம் வெளியேறியிருந்தது என்று பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.யுவதியின் மரணத்தில் பலத்த சந்தேகம் காணப்படுவதால் பொலிஸார் மற்றும் தடயவியல் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிவதற்காகச் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.