• Sep 20 2024

மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்!

Tamil nila / Aug 4th 2024, 2:07 pm
image

Advertisement

இராம பிரானால் வழிபட்ட பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று நண்பகல் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.


மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்ட இந்த ஆலயத்தின் மஹோற்சவமானது கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.



இலங்கையில் மிகவும் உயரமான திராவிட முகப்புத்திர சிற்ப மகாரதம் கொண்ட ஆலயமாகவும் சிறப்புபெற்ற இந்த ஆலயத்தின் இரத உற்சவம் நேற்று சிறப்பாக நடைபெற்றது.

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவாகம கலாநிதி சிவஸ்ரீ கமலராஜ குருக்கள் தலைமையில் உற்சவம் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.

இன்று காலை விநாயகர் மற்றும் கொடித்தம்பத்திற்கு விசேட பூஜைகள் நடைபெற்று திருப்பொற்சுண்ணம் இடிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

அதனை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா சிறப்பாக நடைபெற்றது.


வெளிவீதியில் எருது வாகனத்தில் தீர்த்தக்கரையில் எழுந்தருளி அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பிரமகர்த்தி தோசம் நீங்கப்பெற்ற ஆலயம் என்ற சிற்பினைக்கொண்ட ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்தோற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றுது.இன்றைய தீர்த்தோற்சவத்தில் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர்.

இதன் போது தந்தையை இழந்தவர்கள் இன்றைய தினம் பிதிர்க்கடன் செலுத்தி தமது தோசங்களை நிவர்த்திசெய்தனர்.






மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இராம பிரானால் வழிபட்ட பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று நண்பகல் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்ட இந்த ஆலயத்தின் மஹோற்சவமானது கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.இலங்கையில் மிகவும் உயரமான திராவிட முகப்புத்திர சிற்ப மகாரதம் கொண்ட ஆலயமாகவும் சிறப்புபெற்ற இந்த ஆலயத்தின் இரத உற்சவம் நேற்று சிறப்பாக நடைபெற்றது.மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவாகம கலாநிதி சிவஸ்ரீ கமலராஜ குருக்கள் தலைமையில் உற்சவம் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.இன்று காலை விநாயகர் மற்றும் கொடித்தம்பத்திற்கு விசேட பூஜைகள் நடைபெற்று திருப்பொற்சுண்ணம் இடிக்கும் நிகழ்வு நடைபெற்றது.அதனை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா சிறப்பாக நடைபெற்றது.வெளிவீதியில் எருது வாகனத்தில் தீர்த்தக்கரையில் எழுந்தருளி அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பிரமகர்த்தி தோசம் நீங்கப்பெற்ற ஆலயம் என்ற சிற்பினைக்கொண்ட ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்தோற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றுது.இன்றைய தீர்த்தோற்சவத்தில் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர்.இதன் போது தந்தையை இழந்தவர்கள் இன்றைய தினம் பிதிர்க்கடன் செலுத்தி தமது தோசங்களை நிவர்த்திசெய்தனர்.

Advertisement

Advertisement

Advertisement