கொழும்பை அண்டிய பகுதிகளில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணைகள் அடுத்த வருடம் மார்ச் மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரனகொட மற்றும் 14 கடற்படை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு நேற்று உயர் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
தன்னை பிரதிவாதியாக பெயரிட்டமைக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இருப்பதால் அந்த தீர்ப்பு முடியும்வரை விசாரணையை ஒத்திவைக்குமாறு கரனகொட கோரிக்கை விடுத்தார்.
அவர் முன்வைத்த சமர்பணங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகளான அமல் ரணராஜா, நவரத்ன மாரசிங்க மற்றும் மஞ்சுள திலகரத்ன வழக்கு விசாரணையை மார்ச் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம் வழக்கு விசாரணைக்கு திகதி அறிவிப்பு samugammedia கொழும்பை அண்டிய பகுதிகளில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணைகள் அடுத்த வருடம் மார்ச் மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரனகொட மற்றும் 14 கடற்படை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு நேற்று உயர் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.தன்னை பிரதிவாதியாக பெயரிட்டமைக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இருப்பதால் அந்த தீர்ப்பு முடியும்வரை விசாரணையை ஒத்திவைக்குமாறு கரனகொட கோரிக்கை விடுத்தார்.அவர் முன்வைத்த சமர்பணங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகளான அமல் ரணராஜா, நவரத்ன மாரசிங்க மற்றும் மஞ்சுள திலகரத்ன வழக்கு விசாரணையை மார்ச் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.