இந்தோனேஷியாவில் கைதான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவுடன் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் குழந்தை இன்று (29) மதியம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
“கெஹெல்பத்தார பத்மே”,“கொமாண்டோ சலிந்த” மற்றும் “பாணந்துறை நிலங்க” உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த பாதாள உலக கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பாதாள உலக கும்பலை எதிர்வரும் நாட்களில் மீளவும் இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து UL-365 விமானத்தில் இன்று மாலை சுமார் 5.50 மணியளவில் அவர்கள் இலங்கைக்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கெஹல்பத்தர பத்மே தலைமையிலான குழு சமீபத்தில் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட நிலையில், அந்தப் பெண்ணும் குழந்தையும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இருப்பினும், அந்தப் பெண் மீது கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாததால், இந்தோனேசிய அதிகாரிகள் அவரை இலங்கைக்கு அனுப்பிவைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தோனேஷியாவில் கைதான உலக பாதாள கும்பல்கள் நாட்டிற்கு வருகை இந்தோனேஷியாவில் கைதான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவுடன் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் குழந்தை இன்று (29) மதியம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். “கெஹெல்பத்தார பத்மே”,“கொமாண்டோ சலிந்த” மற்றும் “பாணந்துறை நிலங்க” உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸார் தெரிவித்தனர்.குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த பாதாள உலக கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பாதாள உலக கும்பலை எதிர்வரும் நாட்களில் மீளவும் இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து UL-365 விமானத்தில் இன்று மாலை சுமார் 5.50 மணியளவில் அவர்கள் இலங்கைக்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கெஹல்பத்தர பத்மே தலைமையிலான குழு சமீபத்தில் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட நிலையில், அந்தப் பெண்ணும் குழந்தையும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இருப்பினும், அந்தப் பெண் மீது கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாததால், இந்தோனேசிய அதிகாரிகள் அவரை இலங்கைக்கு அனுப்பிவைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.