• Aug 29 2025

பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்; இளைஞன் உயிரிழப்பு - மற்றொருவர் காயம்!

shanuja / Aug 29th 2025, 2:09 pm
image

பேருந்துடன் - மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 



இந்த விபத்துச்சம்பவம் இரத்தினபுரி - பாணந்துறை வீதியில் இரத்மல்கொட பிரதேசத்தில் நேற்று (28) இடம்பெற்றுள்ளது. 


குறித்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், எதிர்த்திசையில் பயணித்த பேருந்துடன்  மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



விபத்தின் போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞனும் அவருடன்  பயணித்த நபரும் காயமடைந்தனர். 


காயமடைந்த இருவரும்  சிகிச்சைக்காக ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

எனினும் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்தவர் பொருவதண்ட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் என்று தெரிவித்துள்ளனர். 


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்; இளைஞன் உயிரிழப்பு - மற்றொருவர் காயம் பேருந்துடன் - மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துச்சம்பவம் இரத்தினபுரி - பாணந்துறை வீதியில் இரத்மல்கொட பிரதேசத்தில் நேற்று (28) இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், எதிர்த்திசையில் பயணித்த பேருந்துடன்  மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தின் போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞனும் அவருடன்  பயணித்த நபரும் காயமடைந்தனர். காயமடைந்த இருவரும்  சிகிச்சைக்காக ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் பொருவதண்ட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் என்று தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement