வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் பங்காள அமைப்பான பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையம் தனது நூறு நாள் செயல்முனைவு நிகழ்ச்சித்திட்டத்தை இன்று (29) மன்னாரில் முன்னெடுத்துள்ளது.
நூறு நாள் செயல் முனைவின் 29 ஆவது நாள் நிகழ்வு மன்னார் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டது.
மீள பெற முடியாத வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான அதிகார பரவலாக்கம் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில்,மக்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது கலந்து கொண்டவர்கள் தமது சந்தேகங்களுக்கான தெளிவையும் பெற்றுக் கொண்டனர்.இதன் போது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன் வைக்கப்பட்ட 16 கோரிக்கைகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.மேலும் மக்களினால் முன் வைக்கப்பட்ட வேண்டுகோளும் கூட்டி காட்டப்பட்டது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணைய பிரதிநிதிகள் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் 29 ஆவது நிகழ்வு வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் பங்காள அமைப்பான பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையம் தனது நூறு நாள் செயல்முனைவு நிகழ்ச்சித்திட்டத்தை இன்று (29) மன்னாரில் முன்னெடுத்துள்ளது.நூறு நாள் செயல் முனைவின் 29 ஆவது நாள் நிகழ்வு மன்னார் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டது.மீள பெற முடியாத வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான அதிகார பரவலாக்கம் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில்,மக்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வு இடம்பெற்றது.இதன் போது கலந்து கொண்டவர்கள் தமது சந்தேகங்களுக்கான தெளிவையும் பெற்றுக் கொண்டனர்.இதன் போது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன் வைக்கப்பட்ட 16 கோரிக்கைகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.மேலும் மக்களினால் முன் வைக்கப்பட்ட வேண்டுகோளும் கூட்டி காட்டப்பட்டது.குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணைய பிரதிநிதிகள் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.