நானு ஓயாவில் வளர்ப்பு நாயை சித்திரவதை செய்த இளைஞனுக்கு விளக்கமறியல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நானு ஓயாவில் வளர்ப்பு நாய் ஒன்றை இளைஞன் கொடூரமாகத் தாக்கி, ஆற்றில் வீசினார்.
அதனையடுத்து சம்பவம் தொடர்பில் 17 வயது இளைஞன் நானுஓயா பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரான மோகனசுந்தரம் லக்ஷான் என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
கைது செய்யப்பட்ட இளைஞன் விசாரணைகளுக்குப் பின்னர் இன்று (29) நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய இளைஞரை எதிர்வரும் செப்டம்பர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுவரெலியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
வளர்ப்பு நாயை சித்திரவதை செய்த இளைஞனுக்கு விளக்கமறியல் நானு ஓயாவில் வளர்ப்பு நாயை சித்திரவதை செய்த இளைஞனுக்கு விளக்கமறியல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.நானு ஓயாவில் வளர்ப்பு நாய் ஒன்றை இளைஞன் கொடூரமாகத் தாக்கி, ஆற்றில் வீசினார். அதனையடுத்து சம்பவம் தொடர்பில் 17 வயது இளைஞன் நானுஓயா பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார். சந்தேகநபரான மோகனசுந்தரம் லக்ஷான் என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். கைது செய்யப்பட்ட இளைஞன் விசாரணைகளுக்குப் பின்னர் இன்று (29) நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய இளைஞரை எதிர்வரும் செப்டம்பர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுவரெலியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.