தனியார் கல்லூரி ஒன்றின் ஓணம் பண்டிகைக்கு ஹெலிகொப்டரில் மாணவன் ஒருவர் வந்திறங்கிய காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
கேரளா மலப்புரம் தனியார் கல்லூரி ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
கல்லூரியின் ஓணம் பண்டிகை கல்லூரி வளாகத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. மாணவர்கள் ஒவ்வொருவரும் கலாசார உடையணிந்து பண்டிகைக்கு சென்றனர்.
கல்லூரி முழுவதும் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டம் மும்முரமாக இடம்பெற கல்லூரி மாணவன் ஒருவர் ஹெலிகொப்டரில் கல்லூரி மைதான வளாகத்தில் வந்திறங்கியுள்ளார்.
பண்டிகையைக் கொண்டாட ஒட்டுமொத்த கல்லூரியும் மைதானத்தில் ஒன்றுகூடியிருந்த வேளையில் அங்கு ஹெலிகொப்டர் வந்திறங்கியது.
ஹெலிகொப்டர் வந்திறங்கியதும் மாணவர்கள் உட்பட அனைவும் ஹெலிகொப்டரை நோக்கி ஓடினர்.
ஹெலிகொப்டரில் யார் வருகிறார்கள் என நோக்கியிருந்த மாணவர்களுக்கு, தங்களுடன் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் வந்திறங்கியது ஆச்சரியப்படுத்தியது.
ஹெலிகொப்டரில் மாணவன் இறங்கி கெத்தாக அனைவருக்கும் கையசைத்து ஹாய் சொல்லிக்கொண்டார். சக மாணவர்களும் ஹெலிகொப்டரில் வந்த மாணவனுக்கு ஹாய் சொல்லி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கல்லூரி வளாகத்திற்குள் மாணவன் ஒருவர் ஹெலிகொப்டரில் வந்திறங்கிய காட்சி காணொளியாக வெளிவந்து வைரலாகி வருகின்றது.
தனியார் கல்லூரி ஓணம் பண்டிகை; ஹெலிகொப்டரில் வந்திறங்கிய மாணவன் தனியார் கல்லூரி ஒன்றின் ஓணம் பண்டிகைக்கு ஹெலிகொப்டரில் மாணவன் ஒருவர் வந்திறங்கிய காணொளி தற்போது வைரலாகி வருகின்றது. கேரளா மலப்புரம் தனியார் கல்லூரி ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. கல்லூரியின் ஓணம் பண்டிகை கல்லூரி வளாகத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. மாணவர்கள் ஒவ்வொருவரும் கலாசார உடையணிந்து பண்டிகைக்கு சென்றனர். கல்லூரி முழுவதும் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டம் மும்முரமாக இடம்பெற கல்லூரி மாணவன் ஒருவர் ஹெலிகொப்டரில் கல்லூரி மைதான வளாகத்தில் வந்திறங்கியுள்ளார். பண்டிகையைக் கொண்டாட ஒட்டுமொத்த கல்லூரியும் மைதானத்தில் ஒன்றுகூடியிருந்த வேளையில் அங்கு ஹெலிகொப்டர் வந்திறங்கியது. ஹெலிகொப்டர் வந்திறங்கியதும் மாணவர்கள் உட்பட அனைவும் ஹெலிகொப்டரை நோக்கி ஓடினர். ஹெலிகொப்டரில் யார் வருகிறார்கள் என நோக்கியிருந்த மாணவர்களுக்கு, தங்களுடன் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் வந்திறங்கியது ஆச்சரியப்படுத்தியது. ஹெலிகொப்டரில் மாணவன் இறங்கி கெத்தாக அனைவருக்கும் கையசைத்து ஹாய் சொல்லிக்கொண்டார். சக மாணவர்களும் ஹெலிகொப்டரில் வந்த மாணவனுக்கு ஹாய் சொல்லி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கல்லூரி வளாகத்திற்குள் மாணவன் ஒருவர் ஹெலிகொப்டரில் வந்திறங்கிய காட்சி காணொளியாக வெளிவந்து வைரலாகி வருகின்றது.