• Sep 20 2024

நானுஓயாவில் வான் வீதியில் குடைசாய்ந்து விபத்து - பலர் காயம்! samugammedia

Tamil nila / May 6th 2023, 4:33 pm
image

Advertisement

கடந்த ஜனவரி மாதம் 20ம் திகதி நானுஓயா - ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததுடன் 51 பேர் படுகாயமடைந்திருந்தனர். அதே இடத்தில் இன்றும் ஒரு வான் வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நானுஓயா ரதெல்ல பிரதேசத்தில் இருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையில் வேனில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் பின் நோக்கி சென்றமையால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த வேன் வீதியை விட்டு விலகி வீதியின் மறுபக்கத்திற்கு சென்று விபத்துக்குள்ளாகியிருந்தால் பாரிய உயிர் சேதங்கள் இடம் பெற்றிருக்கும் எனவும் , எனினும் இன்று அதிர்ஷ்டவசமாக பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கிறனர்.



இவ்வீதி செங்குத்தான சரிவுகளையும் பாரிய வளைவுகளையும் கொண்டுள்ளதால் கவனமாக வாகனங்களை செலுத்த வேண்டும் என அறிவிப்பு பலகைகளும் இவ்வீதியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


நானுஓயாவில் வான் வீதியில் குடைசாய்ந்து விபத்து - பலர் காயம் samugammedia கடந்த ஜனவரி மாதம் 20ம் திகதி நானுஓயா - ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததுடன் 51 பேர் படுகாயமடைந்திருந்தனர். அதே இடத்தில் இன்றும் ஒரு வான் வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.நானுஓயா ரதெல்ல பிரதேசத்தில் இருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையில் வேனில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் பின் நோக்கி சென்றமையால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.குறித்த வேன் வீதியை விட்டு விலகி வீதியின் மறுபக்கத்திற்கு சென்று விபத்துக்குள்ளாகியிருந்தால் பாரிய உயிர் சேதங்கள் இடம் பெற்றிருக்கும் எனவும் , எனினும் இன்று அதிர்ஷ்டவசமாக பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கிறனர்.இவ்வீதி செங்குத்தான சரிவுகளையும் பாரிய வளைவுகளையும் கொண்டுள்ளதால் கவனமாக வாகனங்களை செலுத்த வேண்டும் என அறிவிப்பு பலகைகளும் இவ்வீதியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement