தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில் கிராமங்கள் நகரங்களாக மாற்றப்பட வேண்டும். அது போன்று எங்களால் செயல்படுத்தப்படுகின்ற புதிய திட்டங்களை சரியான முறையில் நடைமுறைப்படுத்தி அதற்கான ஒதுக்கீடு செய்யப்படுகின்ற நிதிகளை சரியான முறையில் பயன்படுத்தி அதற்குரிய நன்மைகளையும் அந்த பிரதேச மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுதான் நமது பிரதான நோக்கமாகும். என தேசிய மக்களின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற சக்தி உறுப்பினரும், போரதீவுப் பிரதேசத்தின் அபிவிருத்திக் குழுவின் தலைவருமான கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று வெல்லாவெளியில் அமைந்துள்ள பிரதேச செயலகக் கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது.
இதன்போது கூட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் இந்த நாட்டில் ஆட்சிக்கு வந்து ஆறுமாதங்கள் கடந்து இருக்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குரிய முதலாவது அபிவிருத்திக் குழுக் கூட்டம் தற்போது நடைபெறுகின்றது.
இதன்போது இப்பிரதேசத்தில் இருக்கின்ற மிக முக்கியமான பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி சக பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் தீர்க்கமானதாகும். தீர்மானங்களை நிறைவேற்றி அபிவிருத்தியில் வெற்றி காணவேண்டும்.
இந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற பிரச்சனைகளை இக்கூட்டத்தின் வாயிலாக தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் எமது எதிர்பார்ப்பு. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில் கிராமங்கள் நகரங்களாக மாற்றப்பட வேண்டும்.
அது போன்று எங்களால் செயல்படுத்தப்படுகின்ற புதிய திட்டங்களை சரியான முறையில் நடைமுறைப்படுத்தி அதற்கான ஒதுக்கீடு செய்யப்படுகின்ற நிதிகளை சரியான முறையில் பயன்படுத்தி அதற்குரிய நன்மைகளையும் அந்த பிரதேச மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுதான் நமது பிரதான நோக்கமாகும்.
இந்த வகையில் பிரதேசத்தில் இருக்கின்ற முக்கியமான பிரச்சனைகள் மாவட்டத்தில் இருக்கின்ற முக்கியமான பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் நாம் கிளீன் ஸ்ரீலங்கா எனும் வேலைத்திட்டத்தை முன்நகர்த்திக் கொண்டிருக்கின்றோம்.
மக்களிடையே சிறந்த பண்புகளை உருவாக்குவது போன்று பிரதேசங்களையும் கிளீன் செய்து துப்புரவு செய்து கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக தன்னை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.
அது மட்டும் இன்றி அரச அதிகாரிகளின் மனங்களிலும் மாற்றங்கள் உருவாக வேண்டும். மக்கள் சேவைகளை தேடி உங்களிடம் நாடும் போது இந்த சேவைகளை செயல் படுத்த வேண்டியது அரசு அதிகாரிகளின் கடமையாகும் அந்த கடமைகளையும் அரசு அதிகாரிகள் சரிவர செயல்படுத்த வேண்டும் அதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம்.
அது போன்று புதிய பல விடயங்களையும் இது அரசாங்கத்தின் ஊடாக செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம். அதற்கும் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் மிக அவசியமானதாகும். உன அவர் இதன்போது தெரிவித்தார்.
இதன்போது கல்வி, சுகாதாரம், விவசாயம், கால்நடை, வன இலாகா உள்ளிட்ட பல விடையதானங்களில் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும். அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன், மற்றும் தினக்களங்களினதும், அதிகார சபைகளினதும் தலைவர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் கொள்கையின்படி கிராமங்கள் நகரங்களாக மாற்றப்பட வேண்டும் பிரபு எம்.பி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில் கிராமங்கள் நகரங்களாக மாற்றப்பட வேண்டும். அது போன்று எங்களால் செயல்படுத்தப்படுகின்ற புதிய திட்டங்களை சரியான முறையில் நடைமுறைப்படுத்தி அதற்கான ஒதுக்கீடு செய்யப்படுகின்ற நிதிகளை சரியான முறையில் பயன்படுத்தி அதற்குரிய நன்மைகளையும் அந்த பிரதேச மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுதான் நமது பிரதான நோக்கமாகும். என தேசிய மக்களின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற சக்தி உறுப்பினரும், போரதீவுப் பிரதேசத்தின் அபிவிருத்திக் குழுவின் தலைவருமான கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று வெல்லாவெளியில் அமைந்துள்ள பிரதேச செயலகக் கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது. இதன்போது கூட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் இந்த நாட்டில் ஆட்சிக்கு வந்து ஆறுமாதங்கள் கடந்து இருக்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குரிய முதலாவது அபிவிருத்திக் குழுக் கூட்டம் தற்போது நடைபெறுகின்றது.இதன்போது இப்பிரதேசத்தில் இருக்கின்ற மிக முக்கியமான பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி சக பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் தீர்க்கமானதாகும். தீர்மானங்களை நிறைவேற்றி அபிவிருத்தியில் வெற்றி காணவேண்டும்.இந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற பிரச்சனைகளை இக்கூட்டத்தின் வாயிலாக தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் எமது எதிர்பார்ப்பு. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில் கிராமங்கள் நகரங்களாக மாற்றப்பட வேண்டும். அது போன்று எங்களால் செயல்படுத்தப்படுகின்ற புதிய திட்டங்களை சரியான முறையில் நடைமுறைப்படுத்தி அதற்கான ஒதுக்கீடு செய்யப்படுகின்ற நிதிகளை சரியான முறையில் பயன்படுத்தி அதற்குரிய நன்மைகளையும் அந்த பிரதேச மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுதான் நமது பிரதான நோக்கமாகும்.இந்த வகையில் பிரதேசத்தில் இருக்கின்ற முக்கியமான பிரச்சனைகள் மாவட்டத்தில் இருக்கின்ற முக்கியமான பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் நாம் கிளீன் ஸ்ரீலங்கா எனும் வேலைத்திட்டத்தை முன்நகர்த்திக் கொண்டிருக்கின்றோம்.மக்களிடையே சிறந்த பண்புகளை உருவாக்குவது போன்று பிரதேசங்களையும் கிளீன் செய்து துப்புரவு செய்து கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக தன்னை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.அது மட்டும் இன்றி அரச அதிகாரிகளின் மனங்களிலும் மாற்றங்கள் உருவாக வேண்டும். மக்கள் சேவைகளை தேடி உங்களிடம் நாடும் போது இந்த சேவைகளை செயல் படுத்த வேண்டியது அரசு அதிகாரிகளின் கடமையாகும் அந்த கடமைகளையும் அரசு அதிகாரிகள் சரிவர செயல்படுத்த வேண்டும் அதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம். அது போன்று புதிய பல விடயங்களையும் இது அரசாங்கத்தின் ஊடாக செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம். அதற்கும் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் மிக அவசியமானதாகும். உன அவர் இதன்போது தெரிவித்தார்.இதன்போது கல்வி, சுகாதாரம், விவசாயம், கால்நடை, வன இலாகா உள்ளிட்ட பல விடையதானங்களில் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும். அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன், மற்றும் தினக்களங்களினதும், அதிகார சபைகளினதும் தலைவர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.