கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் தரம் ஆறில் கல்வி கற்கும் முஹம்மது நசீம் ஆயிஷா மனால் தேசிய மட்ட இரண்டாம் மொழி சிங்கள பேச்சுப்போட்டியில் திறமைச் சான்றிதழ் பெற்று சாதனை படைத்துள்ளார்.
வடமேல் மாகாணத்தில் இரண்டாம் மொழி சிங்கள பேச்சுப்போட்டியில் சிறந்த பேச்சாளராக தெரிவு செய்யப்பட்ட இவர் தேசிய மட்டப்போட்டியில் கலந்து கொண்டு திறமைச் சான்றிதழ் பெற்றியிருப்பது ஒரு வரலாற்று சாதனையாகும்.
தரம் ஆறில் கல்வி கற்கும் இவர் சிங்கள மொழி மீது உள்ள ஆர்வம் மற்றும் பற்று காரணமாக சிங்கள மொழியை சரளமாக பேசக்கூடிய ஒருவராக இம்மாணவி திகழ்கிறார்.
மேலும் இப்போட்டியில் பௌத்தர்கள் கொண்டாடும் "வெசாக் " பண்டிகை தொடர்பாக சிறந்த உரையொன்ரை ஆற்றிய இவர் நடுவர்களது வேண்டுகோளை ஏற்று "எனது ஆசிரியர் " எனும் தலைப்பில் சிறப்பான உரையொன்றினையும் ஆற்றினார்.
இவர் தமிழ்தினப் போட்டி, ஆங்கில தினப்போட்டி, மற்றும் மீலாதுன் நபிவிழா போட்டிகளில் , மாகாண, மாவட்ட ரீதியில், பல்வேறு இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் கலந்து கொண்டு பல வெற்றிகளையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ள இம்மாணவி சிறந்த அறிவிப்பாளராகவும் திகழ்கிறார்.
இந்நிலையில் குறித்த மாணவிக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தேசிய மட்ட சிங்கள பேச்சுப்போட்டியில் கற்பிட்டி அல் அக்ஸா பாடசாலை மாணவி சாதனை.samugammedia கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் தரம் ஆறில் கல்வி கற்கும் முஹம்மது நசீம் ஆயிஷா மனால் தேசிய மட்ட இரண்டாம் மொழி சிங்கள பேச்சுப்போட்டியில் திறமைச் சான்றிதழ் பெற்று சாதனை படைத்துள்ளார்.வடமேல் மாகாணத்தில் இரண்டாம் மொழி சிங்கள பேச்சுப்போட்டியில் சிறந்த பேச்சாளராக தெரிவு செய்யப்பட்ட இவர் தேசிய மட்டப்போட்டியில் கலந்து கொண்டு திறமைச் சான்றிதழ் பெற்றியிருப்பது ஒரு வரலாற்று சாதனையாகும்.தரம் ஆறில் கல்வி கற்கும் இவர் சிங்கள மொழி மீது உள்ள ஆர்வம் மற்றும் பற்று காரணமாக சிங்கள மொழியை சரளமாக பேசக்கூடிய ஒருவராக இம்மாணவி திகழ்கிறார்.மேலும் இப்போட்டியில் பௌத்தர்கள் கொண்டாடும் "வெசாக் " பண்டிகை தொடர்பாக சிறந்த உரையொன்ரை ஆற்றிய இவர் நடுவர்களது வேண்டுகோளை ஏற்று "எனது ஆசிரியர் " எனும் தலைப்பில் சிறப்பான உரையொன்றினையும் ஆற்றினார். இவர் தமிழ்தினப் போட்டி, ஆங்கில தினப்போட்டி, மற்றும் மீலாதுன் நபிவிழா போட்டிகளில் , மாகாண, மாவட்ட ரீதியில், பல்வேறு இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் கலந்து கொண்டு பல வெற்றிகளையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ள இம்மாணவி சிறந்த அறிவிப்பாளராகவும் திகழ்கிறார்.இந்நிலையில் குறித்த மாணவிக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.