• Mar 14 2026

கிண்ணியா குறிஞ்சாக்கேணி அரபா மகா வித்தியாலயத்தில் சாதனையாளர்கள் கௌரவிப்பு!

Ziya / Feb 10th 2026, 2:07 pm
image

பொது பரீட்சையில் 2025 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில்,சாதனை படைத்த கிண்ணியா குறிஞ்சாக்கேணி அரபா மகா வித்தியாலய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (10) இடம்பெற்றுள்ளது.


பாடசாலை அதிபர் எம். எல். எம். முபாரக் தலைமையில், பாடசாலையின் கேட்பர் கூடத்தில் நடைபெற்றது.


இதன்போது, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில், கல்வி பொது தராதர சாதாரண தரம் மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றில் சித்தியடைந்த மாணவர்கள் பரிசீல்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 


இந்த நிகழ்வில், பரக்கா செரிட்டி தொண்டு நிறுவனத்தின் தெற்காசியா பிராந்திய பணிப்பாளர் சட்டத்தரணி அமீன் முஜிப் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பரிசீல்களை வழங்கி வைத்தார்.


மேலும் இந்த நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் கிண்ணியா பிரதேச இணைப்பாளரும் பிரதேச, உள்ளூராட்சி மன்ற உறுப்பினருமான எம். ஈ.எம். ராஃபிக், குறிஞ்சாக்கேணி கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ். ஹசீக், குறிஞ்சாக்கேணி மகளிர் மகாவித்தியாலய அதிபர் எம். ரீ. ஹியத்துள்ளா ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர். 


மாணவர்களின் கல்விச் சாதனைகளை பாராட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு, மாணவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும் முக்கிய நிகழ்வாக அமையும் என பாடசாலை சமூகத்தினர் தெரிவித்தனர்.


இந்த நிகழ்வு பாடசாலை அபிவிருத்தி சபை, பழைய மாணவர்கள் சங்கம், நலன் விரும்பிகள் மற்றும் பாடசாலை பணியாளர்களின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிண்ணியா குறிஞ்சாக்கேணி அரபா மகா வித்தியாலயத்தில் சாதனையாளர்கள் கௌரவிப்பு பொது பரீட்சையில் 2025 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில்,சாதனை படைத்த கிண்ணியா குறிஞ்சாக்கேணி அரபா மகா வித்தியாலய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (10) இடம்பெற்றுள்ளது.பாடசாலை அதிபர் எம். எல். எம். முபாரக் தலைமையில், பாடசாலையின் கேட்பர் கூடத்தில் நடைபெற்றது.இதன்போது, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில், கல்வி பொது தராதர சாதாரண தரம் மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றில் சித்தியடைந்த மாணவர்கள் பரிசீல்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில், பரக்கா செரிட்டி தொண்டு நிறுவனத்தின் தெற்காசியா பிராந்திய பணிப்பாளர் சட்டத்தரணி அமீன் முஜிப் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பரிசீல்களை வழங்கி வைத்தார்.மேலும் இந்த நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் கிண்ணியா பிரதேச இணைப்பாளரும் பிரதேச, உள்ளூராட்சி மன்ற உறுப்பினருமான எம். ஈ.எம். ராஃபிக், குறிஞ்சாக்கேணி கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ். ஹசீக், குறிஞ்சாக்கேணி மகளிர் மகாவித்தியாலய அதிபர் எம். ரீ. ஹியத்துள்ளா ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர். மாணவர்களின் கல்விச் சாதனைகளை பாராட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு, மாணவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும் முக்கிய நிகழ்வாக அமையும் என பாடசாலை சமூகத்தினர் தெரிவித்தனர்.இந்த நிகழ்வு பாடசாலை அபிவிருத்தி சபை, பழைய மாணவர்கள் சங்கம், நலன் விரும்பிகள் மற்றும் பாடசாலை பணியாளர்களின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement