• Mar 14 2026

ஈரானில் உள்ள இலங்கையர்களைப் பாதுகாக்க விரைந்து செயற்படுக! - அரசிடம் சஜித் வேண்டுகோள்

Chithra / Mar 1st 2026, 9:44 am
image


இஸ்ரேல் - ஈரான் இடையிலான தீவிர இராணுவ மோதல்களை அடுத்து, ஈரானில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.


இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


அவரது பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-


"ஈரானில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிர இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக, அங்கு வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களின் உயிரைப் பாதுகாக்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இலங்கை அரசு உடனடியாக இராஜதந்திர ரீதியிலான மற்றும் அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.


மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் நலன் கருதி அரசு கூடுதல் அக்கறையுடன் செயற்பட வேண்டும்." - என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஈரானில் உள்ள இலங்கையர்களைப் பாதுகாக்க விரைந்து செயற்படுக - அரசிடம் சஜித் வேண்டுகோள் இஸ்ரேல் - ஈரான் இடையிலான தீவிர இராணுவ மோதல்களை அடுத்து, ஈரானில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவரது பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-"ஈரானில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிர இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக, அங்கு வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களின் உயிரைப் பாதுகாக்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இலங்கை அரசு உடனடியாக இராஜதந்திர ரீதியிலான மற்றும் அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் நலன் கருதி அரசு கூடுதல் அக்கறையுடன் செயற்பட வேண்டும்." - என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement