• Nov 22 2024

மாகாண ஆளுநர்களுக்கு எதிராக நடவடிக்கை! பொலிஸ் மா அதிபருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம்

Chithra / Jul 23rd 2024, 9:45 am
image

 

உள்ளூராட்சி நிறுவனங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்காக முன்னாள் உள்ளூராட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்ட நியமனங்களை இரத்து செய்யாத மாகாண அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது. 

குறித்த மேற்பார்வை செயற்பாட்டிற்காக ஒத்திவைக்கப்பட்ட தேர்தல்கள் தொடர்பாக முன்னாள் உள்ளூராட்சி பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 

இந்நிலையில், அவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டதாக சில மாகாண ஆளுநர்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள் உட்பட கட்சி ஆணைக்குழுவிடம் அண்மையில் முறைப்பாடுகளை சமர்ப்பித்திருந்தனர்.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் பிரகாரம், தெற்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்கள் உரிய அழைப்பாணையை இரத்துச் செய்த நிலையில், மேல் மற்றும் மத்திய மாகாண ஆளுநர்கள் இதுவரை உரிய பதில் அளிக்கவில்லை.

இதனை தொடர்ந்து, இது தொடர்பாக நேரடியாக இரு மாகாண ஆளுநர்களுக்கும் தேர்தல் ஆணையம் நினைவூட்டல் கடிதம் அனுப்பியிருந்தது.

இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையிலேயே குறித்த நியமனங்களை இரத்து செய்யாத மாகாண ஆளுநர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், ஜனாதிபதி தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு இந்த வாரம் அறிவிக்கவுள்ளதுடன், அது தொடர்பான கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளது.

மாகாண ஆளுநர்களுக்கு எதிராக நடவடிக்கை பொலிஸ் மா அதிபருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம்  உள்ளூராட்சி நிறுவனங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்காக முன்னாள் உள்ளூராட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்ட நியமனங்களை இரத்து செய்யாத மாகாண அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது. குறித்த மேற்பார்வை செயற்பாட்டிற்காக ஒத்திவைக்கப்பட்ட தேர்தல்கள் தொடர்பாக முன்னாள் உள்ளூராட்சி பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், அவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டதாக சில மாகாண ஆளுநர்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள் உட்பட கட்சி ஆணைக்குழுவிடம் அண்மையில் முறைப்பாடுகளை சமர்ப்பித்திருந்தனர்.இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் பிரகாரம், தெற்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்கள் உரிய அழைப்பாணையை இரத்துச் செய்த நிலையில், மேல் மற்றும் மத்திய மாகாண ஆளுநர்கள் இதுவரை உரிய பதில் அளிக்கவில்லை.இதனை தொடர்ந்து, இது தொடர்பாக நேரடியாக இரு மாகாண ஆளுநர்களுக்கும் தேர்தல் ஆணையம் நினைவூட்டல் கடிதம் அனுப்பியிருந்தது.இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையிலேயே குறித்த நியமனங்களை இரத்து செய்யாத மாகாண ஆளுநர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஜனாதிபதி தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு இந்த வாரம் அறிவிக்கவுள்ளதுடன், அது தொடர்பான கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement