• Mar 31 2025

சிவனடிபாத மலை பருவ காலத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை..!

Sharmi / Dec 27th 2024, 10:38 am
image

சிவனடி பாத மலை பருவகாலத்தில் மது மற்றும் போதைப்பொருள் பாவித்து வருபவர்கள் மற்றும் அதனை சூசகமாக கொண்டு வருபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், அதனைமீறி போதைப் பொருள் மற்றும் மதுபானம் கொண்டு வருபவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த படுவார்கள் என்று ஹட்டன் வலய போதைப் பொருள் பிரிவின் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

இதன்படி மதுபானங்கள், புகையிலை அடங்கிய போதைப் பொருள் மற்றும் போதைப் பொருட்கள் தமது பொதிகளில் வைத்திருப்பது மற்றும் வர்த்தக நிலையங்களில் வைத்து இருப்பது, விற்பனை செய்வது, முற்றிலும் சட்ட விரோதமானது.

அதையும் மீறி இவ்வாறான போதைப் பொருட்கள் வைத்து இருப்பவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார். 

அத்துடன் சிவனடி பாத மலை உச்சியில் உள்ள ஆலயம் மற்றும் தங்குமிடம் மடங்கள் அடிவாரம் முதல் மலை உச்சி வரையுள்ள சகல வர்த்தக நிலையங்களில் சட்டவிரோதமான பொருட்கள் விற்பனை செய்வதை தடுப்பதற்காக விசேட போதைப் பொருள், தடுப்பு அதிகாரிகளை கண்காணிப்பில் ஈடுபடுத்தியுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட செயலாளர் தெரிவித்தார். 

விற்பனை நிலையங்களில் பூஜைப் பொருட்கள் மற்றும் சுத்தமான குடிநீர் பாதுகாப்பான முறையில் உணவு பண்டங்கள் தவிர  வேறு எந்த பொருளையும் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


சிவனடிபாத மலை பருவ காலத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை. சிவனடி பாத மலை பருவகாலத்தில் மது மற்றும் போதைப்பொருள் பாவித்து வருபவர்கள் மற்றும் அதனை சூசகமாக கொண்டு வருபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், அதனைமீறி போதைப் பொருள் மற்றும் மதுபானம் கொண்டு வருபவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த படுவார்கள் என்று ஹட்டன் வலய போதைப் பொருள் பிரிவின் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.இதன்படி மதுபானங்கள், புகையிலை அடங்கிய போதைப் பொருள் மற்றும் போதைப் பொருட்கள் தமது பொதிகளில் வைத்திருப்பது மற்றும் வர்த்தக நிலையங்களில் வைத்து இருப்பது, விற்பனை செய்வது, முற்றிலும் சட்ட விரோதமானது.அதையும் மீறி இவ்வாறான போதைப் பொருட்கள் வைத்து இருப்பவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார். அத்துடன் சிவனடி பாத மலை உச்சியில் உள்ள ஆலயம் மற்றும் தங்குமிடம் மடங்கள் அடிவாரம் முதல் மலை உச்சி வரையுள்ள சகல வர்த்தக நிலையங்களில் சட்டவிரோதமான பொருட்கள் விற்பனை செய்வதை தடுப்பதற்காக விசேட போதைப் பொருள், தடுப்பு அதிகாரிகளை கண்காணிப்பில் ஈடுபடுத்தியுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட செயலாளர் தெரிவித்தார். விற்பனை நிலையங்களில் பூஜைப் பொருட்கள் மற்றும் சுத்தமான குடிநீர் பாதுகாப்பான முறையில் உணவு பண்டங்கள் தவிர  வேறு எந்த பொருளையும் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement