• Jan 25 2025

புலிகள் அமைப்பின் சின்னங்களுடன் நினைவேந்தியிருந்தால் நடவடிக்கை - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

Tharmini / Dec 7th 2024, 4:35 pm
image

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கொடியான புலிக்கொடி மற்றும் புலிகள் அமைப்புக்குரிய சின்னங்களுடன் நினைவேந்தல் நடத்தப்பட்டிருந்தால். 

உரிய விசாரணைகளின் பின்னர் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே. புத்திக மனதுங்க தெரிவித்தார்.

மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,"புலிகள் அமைப்பின் கொடி மற்றும் அடையாளங்களுடன் நினைவேந்தல் நடத்த முடியாது. 

சட்டத்தில் அதற்கு இடமில்லை. 

அவ்வாறு நடந்திருந்தால் அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இனவாதத்துக்கும், தீவிரவாதத்துக்கும் இடமில்லை." - என்றார்

புலிகள் அமைப்பின் சின்னங்களுடன் நினைவேந்தியிருந்தால் நடவடிக்கை - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கொடியான புலிக்கொடி மற்றும் புலிகள் அமைப்புக்குரிய சின்னங்களுடன் நினைவேந்தல் நடத்தப்பட்டிருந்தால். உரிய விசாரணைகளின் பின்னர் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே. புத்திக மனதுங்க தெரிவித்தார்.மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,"புலிகள் அமைப்பின் கொடி மற்றும் அடையாளங்களுடன் நினைவேந்தல் நடத்த முடியாது. சட்டத்தில் அதற்கு இடமில்லை. அவ்வாறு நடந்திருந்தால் அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இனவாதத்துக்கும், தீவிரவாதத்துக்கும் இடமில்லை." - என்றார்

Advertisement

Advertisement

Advertisement