மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் அபிவிருத்தி பணிகளின்போது நடைபெற்ற ஊழல்கள் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்(30) நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்ட 725 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் 25மில்லியன் ரூபாய்களாக பிரிக்கப்பட்டு எந்தவித ஒப்பந்த விண்ணப்பக் கோரல்களும் இல்லாமல் முறைகேடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது ஆட்சியில் எந்தவொரு அரசியல் தலையீடும் இருக்காது, அதனையும் மீறி அரசியல் ரீதியாக எமது பெயரை கூறிக்கொண்டு யாரும் வந்தால் உடனே எமக்கு அறியத்தாருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, மாவட்டத்தில் இடம்பெற்றதாக கருதப்படும் காணி மோசடிகள், விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வனவிலங்கு பிரச்சினைகள், நீர்பாசனம், கனிய வள அகழ்வு, அனர்த்த முன்னாயத்த செயற்பாடுகள், கல்வி, சுகாதாரம், மீன் பிடி, மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி விடயங்கள், ஏனைய அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திப்பது தொடர்பாக அபிவிருத்தி குழுத் தலைவர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோரினால் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சில விடயங்கள் தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக உப குழுக்கள் நியமிக்கப்பட்டதுடன், அவர்களின் பரிந்துரைகளுக்கு அமைய முடிவுகள் எடுக்கப்படும் என தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜெஸ்டினா முரளிதரன் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து சிறிநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழா, முஹம்மட் சாலி நளீம், கிழக்கு மாகாண அரச திணைக்களங்களின் செயலாளர்கள், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்ஷனி ஸ்ரீகாந்த், நவரூபரஞ்சனி முகுந்தன் (காணி), பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உயரதிகாரிகள் உள்ளிட்ட ஏனைய அரச திணைக்களங்களின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
அபிவிருத்தி பணிகளின்போது நடைபெற்ற ஊழல்கள் தொடர்பில் நடவடிக்கை பிரதி அமைச்சர் உறுதி மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் அபிவிருத்தி பணிகளின்போது நடைபெற்ற ஊழல்கள் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம்(30) நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்ட 725 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் 25மில்லியன் ரூபாய்களாக பிரிக்கப்பட்டு எந்தவித ஒப்பந்த விண்ணப்பக் கோரல்களும் இல்லாமல் முறைகேடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது ஆட்சியில் எந்தவொரு அரசியல் தலையீடும் இருக்காது, அதனையும் மீறி அரசியல் ரீதியாக எமது பெயரை கூறிக்கொண்டு யாரும் வந்தால் உடனே எமக்கு அறியத்தாருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.இதன்போது, மாவட்டத்தில் இடம்பெற்றதாக கருதப்படும் காணி மோசடிகள், விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வனவிலங்கு பிரச்சினைகள், நீர்பாசனம், கனிய வள அகழ்வு, அனர்த்த முன்னாயத்த செயற்பாடுகள், கல்வி, சுகாதாரம், மீன் பிடி, மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி விடயங்கள், ஏனைய அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திப்பது தொடர்பாக அபிவிருத்தி குழுத் தலைவர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோரினால் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.சில விடயங்கள் தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக உப குழுக்கள் நியமிக்கப்பட்டதுடன், அவர்களின் பரிந்துரைகளுக்கு அமைய முடிவுகள் எடுக்கப்படும் என தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜெஸ்டினா முரளிதரன் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து சிறிநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழா, முஹம்மட் சாலி நளீம், கிழக்கு மாகாண அரச திணைக்களங்களின் செயலாளர்கள், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்ஷனி ஸ்ரீகாந்த், நவரூபரஞ்சனி முகுந்தன் (காணி), பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உயரதிகாரிகள் உள்ளிட்ட ஏனைய அரச திணைக்களங்களின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.