வவுனியா நகர் வடக்கு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பொது அமைப்புக்களுடன் கிராமங்களில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பில் இன்று (31) கலந்துரையாடல் ஒன்றினை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ப. சத்தியலிங்கம் மேற்கொண்டார்.
இதன் போது வவுனியா நகர் வடக்கு கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட கிராம அபிவிருத்தி சங்கங்கள், சனசமூக நிலையங்கள், ஆலயங்கள், இளைஞர் கழகங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கிராமங்களுக்கு தேவையான திட்டங்கள் தொடர்பில் எழுத்து மூலமாக கையளித்திருந்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், இந்த அரசாங்கம் நிதி முறைகேடுகள் இடம்பெறுவதனை முன்னிலைப்படுத்தியே ஆட்சிக்கு வந்திருந்தது.
எனவே இந்த அரசாங்கத்தின் ஊடாக ஒதுக்கப்படுகின்ற நிதி எவ்வாறு வரும் என்பதில் நம்பிக்கை இல்லை.
எனினும் நாம் பல்வேறுபட்ட அமைப்புக்கள் ஊடாக பணத்தைப் பெற்று இந்த மக்களினுடைய தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு உள்ளது.
அதனை நாம் செயல்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார்.
பல்வேறுபட்ட அமைப்புக்கள் ஊடாக நாம் பணத்தைப் பெற்று : மக்களினுடைய தேவைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது - வைத்தியர் ப. சத்தியலிங்கம் வவுனியா நகர் வடக்கு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பொது அமைப்புக்களுடன் கிராமங்களில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பில் இன்று (31) கலந்துரையாடல் ஒன்றினை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ப. சத்தியலிங்கம் மேற்கொண்டார்.இதன் போது வவுனியா நகர் வடக்கு கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட கிராம அபிவிருத்தி சங்கங்கள், சனசமூக நிலையங்கள், ஆலயங்கள், இளைஞர் கழகங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கிராமங்களுக்கு தேவையான திட்டங்கள் தொடர்பில் எழுத்து மூலமாக கையளித்திருந்தனர்.இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், இந்த அரசாங்கம் நிதி முறைகேடுகள் இடம்பெறுவதனை முன்னிலைப்படுத்தியே ஆட்சிக்கு வந்திருந்தது.எனவே இந்த அரசாங்கத்தின் ஊடாக ஒதுக்கப்படுகின்ற நிதி எவ்வாறு வரும் என்பதில் நம்பிக்கை இல்லை.எனினும் நாம் பல்வேறுபட்ட அமைப்புக்கள் ஊடாக பணத்தைப் பெற்று இந்த மக்களினுடைய தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு உள்ளது.அதனை நாம் செயல்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார்.